பிரம்மாண்டமாக நடந்த "யோகி 2.0" பதவியேற்பு.. ஸ்பெஷல் விருந்தினர்களாக வந்த விஐபிகள் யார் தெரியுமா?
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 2 வது முறையாக பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றதை அடுத்து அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட விழாவில் அம்மாநில முதலமைச்சராக 2 வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார்.
இதில் பாரதி ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் கடந்து ஏராளமான அறிஞர்கள், சினிமா நடிகர்கள், இயக்குநர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், தொழிலதிபர்கள், மத போதகர்கள் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர் நரேந்திர மோடி
உத்தரப்பிரதேச தேர்தல் வெற்றிக்காக சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தாமரையை 2 வது முறையாக அம்மாநிலத்தில் அடுத்தடுத்து மலர வைத்ததில் பிரதமர் மோடிக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர் இன்று சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்துகொண்டார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அம்பானி முதல் அதானி வரை
இந்த விழாவுக்கு ஏராளமான தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழும தலைவர் கவுதம் அதானி, மகிந்திரா குழுமத்தை சேர்ந்த ஆனந்த் மகிந்திரா, குஷாக்ரா பஜாஜ் (பஜாஜ் குழுமம்), குமார் மங்கலம் பிர்லா (ஆதித்ய பிர்லா குழுமம்), என்.சந்திரசேகரன் (டாடா குழுமம்), தர்ஷன் ஹிரானந்தானி (ஹிரானந்தனி குழுமம்), யூசுப் அலி (லூலூ குழுமம்), சுதிர் மேத்தா (டொரண்ட் குழுமம்), சஞ்சீவ் கோயங்கா (கோயங்கா குழுமம்) மற்றும் அபிநந்த் லோதா (லோதா குழுமம்) உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

காஷ்மீர் பைல்ஸ் படக்குழுவுக்கு அழைப்பு
அதேபோல் அண்மையில் வெளியாகி பாஜகவினரால் பெரிதும் பாராட்டப்பட்ட தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட குழுவினருக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. படத்தின் நடிகர் அனுபம் கேர், இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி உள்ளிடோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன் நடிகர் அக்ஷய் குமார், நடிகை கங்கனா ரனாவத், வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்டோரையும் விழாவில் பங்கேற்க அழைத்திருந்தனர்.

பாஜக முதலமைச்சர்களுக்கு அழைப்பு
பாஜக ஆளும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங், உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மற்றும் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோரும் யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவுக்கு வந்துள்ளனர்.
அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேப், கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், பீகார் துணை முதல்வர்கள் ரேணு தேவி மற்றும் தர்கிஷோர் பிரசாத், நாகாலாந்து துணை முதல்வர் ஒய் பாட்டன், அருணாச்சல பிரதேச துணை முதல்வர் சௌனா மெய்ன் மற்றும் திரிபுராவின் துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மா ஆகியோரும் விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

சாமியார்கள் முதல் ஆளுநர்கள் வரை
யோகி ஆதித்யநாத்தின் விழாவில் முன்னாள் ஆளுநர்கள் அன்ஷுமன் சிங், ராம் நாயக், எம்.பி.க்களான நிஷிகாந்த் துபே, சத்ய பால் சிங் பாகேல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பிரயாக்ராஜின் மகான்கள், யோகா குரு பாபா ராம்தேவ் தவிர்த்து அகில பாரதிய அகாரா பரிஷத்தின் பொதுச் செயலாளர் ஹரி கிரி மகராஜ், மகாநிர்வாணி அகாராவின் செயலாளர் யமுனா பூரி மகராஜ், ஸ்ரீ மத் பாகம்பரி காடி மற்றும் படே ஹனுமான் மந்திரின் சாமியார் பல்வீர் கிரி ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

யோகி தனிப்பட்ட முறையில் அழைத்த VVIPகள் யார் தெரியுமா?
அயோத்தி, வாரணாசி, மதுராவை மடங்களை சேர்ந்த 50 மதகுருக்களை தனிப்பட்ட முறையில் அழைத்து இருக்கிறார் யோகி ஆதித்யநாத். உத்தரப்பிரதேசத்தின் 13 அகாடாக்களின் பிரதிநிதிகள் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வேந்தர் நீதிபதி கிர்தர் மாளவியா மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.சி.திரிபாதி ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications