பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுதான் பாஜக அரசின் முதன்மையான பணி! யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் கன்யா சுமங்கலா யோஜனா திட்டத்தின் தொகையை உயர்த்தியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக பல்வேறு புதிய திட்டங்களை யோகி அறிவித்து வருகிறார். இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்திருந்த முதலமைச்சரின் கன்யா சுமங்கலா யோஜனா திட்டத்தின் தொகையை உயர்த்தி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தின் இரட்டை என்ஜின் அரசு, கன்யா சுமங்கலா திட்டத்தின் தொகையை 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்த இருக்கிறது. இந்த உத்தரவு 2024-2025ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும். உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளவும், கல்வியை பெற்று தன்னம்பிக்கையுடன் இருக்கவும் இந்த திட்டம் பயன்படும். முதற்கட்டமாக, இத்திட்டத்தின் கீழ், ஆறு கட்டங்களாக, 15,000 ரூபாய் தொகுப்பு வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டு முதல், மகள் பிறந்தவுடன், அவரது பெற்றோர் கணக்கில், 5,000 ரூபாய் செலுத்தப்படும். அதேபோல், மகளுக்கு, ஒரு வயது நிறைவடையும் போது, 1ம் வகுப்பு படிக்கும் போது, 2,000 ரூபாய் மாற்றப்படும். ரூ.3,000; ஆறாம் வகுப்பில் சேரும்போது, ரூ.3,000; ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தால், ரூ.5,000; மகள் பட்டதாரி, டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு படித்தால், ரூ.7,000 அவரது கணக்கிற்கு மாற்றப்படும். இத்திட்டத்தின் மூலம் இன்று மாநிலத்தில் 16.24 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச அரசை பொறுத்த அளவில் பெண்கள் சுயமரியாதையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications