ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க அதிரடி நடவடிக்கை! கைமேல் பலன்.. உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: கடந்த 6 ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலன் அளித்திருப்பதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் உ.பியில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் பலனளித்துள்ளன என கூறியுள்ளார்.

Yogi Adityanath has said that the measures taken to overcome malnutrition have yielded results

யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். அதாவது கடந்த 6 ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அதனை கண்காணித்தும் வந்திருக்கிறது. இதனால்தான் உ.பியின் குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த பிரச்னைகளை போக்க மாநிலம் முழுவதும் சுமார் 897 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், 1.89 அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "இது இரண்டு கோடிக்கும் அதிகமான குழந்தைகளை பாதுகாத்திருக்கிறது. குழந்தைகளுடன் கர்ப்பிணிகளையும் சேர்த்தால் சுமார் 2.08 கோடி பேர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். இருப்பினும் ஊட்டச்சத்து குறைபாட்டை 100 சதவிகிதம் ஒழிக்க வேண்டும் என்கிற நோக்கில் இந்த அரசு பயணித்துக்கொண்டிருக்கிறது. விரைவில் இந்த இலக்கு எட்டப்படும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+