5.5 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டிருக்கிறோம்! உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சுமார் 5.5 கோடி பேரை பாஜக அரசு ஏழ்மையிலிருந்து மீட்டிருக்கிறது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
கோரக்பூரில் உள்ள வீர் பகதூர் சிங் விளையாட்டுக் கல்லூரி வளாகத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பயனாளிகளிடம் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "கடந்த 6 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து சுமார் 5.5 கோடி பேரை பாஜக டபுள் என்ஜின் அரசு ஏழ்மையிலிருந்து மீட்டிருக்கிறது. ஆனால் முந்தைய அரசுகள் இதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

5,100 பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புற) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.51.52 கோடி இன்று செலுத்தப்பட்டிருக்கிறது. காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி அரசுகள் நீண்ட காலம் ஆட்சி செய்து, பல்வேறு திட்டங்களின் பலன்களை பொதுமக்களுக்கு வழங்காமல் இருந்தது. காங்கிரஸால் வறுமையை அகற்ற முடியவில்லை, ஆனால் வெற்று முழக்கங்களைக் கொடுத்தது. இதேபோல சமாஜ்வாதியின் முழக்கங்கள் சாதி வெறி அரசியலை தூண்டியது.
இவர்களது காலகட்டத்தில் வளர்ச்சி என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது பின்தங்கி இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் பாஜக ஏற்படுத்திய வளர்ச்சியை இவர்கள் முன்னரே செய்திருக்கலாம். ஆனால் இவர்களின் ஊழல் காரணமாக வளர்ச்சி சாத்தியமற்றதாக போனது. தற்போது பொருளாதார ரீதியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமானதாக இருக்கிறது. பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதேபோல ஜி20 நாடுகளிலும் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது.
இதே வளர்ச்சி உத்தரப் பிரதேசத்திலும் பிரதிபலித்திருக்கிறது. உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில், பாஜக அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் சார்ந்த திட்டங்கள்தான் அதிகம். இந்த திட்டங்கள் எதிர்காலத்தை பிரதிபலிக்கும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டது. உதாரணமாக உத்தரப் பிரதேசத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.2,000 கோடி நாங்கள் ஒதுக்கியிருந்தோம். இதன் மூலம் 2023-2024ம் ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகள் அளவுக்கு உயரும்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications