வாக்குறுதியை அள்ளி வீசிய ராஜ்நாத்சிங் “வேலை எங்கே” என முழக்கமிட்ட இளைஞர்கள்.. பரபரத்த உபி பிரச்சாரம்
லக்னோ : உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டு கோபத்துடன் முழக்கமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம். ஏற்கனவே 2 கட்ட வாக்குப் பதிவு உபியில் முடிவடைந்துள்ளது.
முதல் கட்டமாக கடந்த 10-ந் தேதி 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14ஆம் தேதி 2ஆம் கட்ட வாக்குப் பதிவு சஹாரான்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நாளை 3ஆம் கட்ட வாக்குப் பதிவு அங்கு நடைபெறவுள்ளது.

3ஆம் கட்ட தேர்தல்
கசன்கஞ்ச், இடா, ஹத்ராஸ், பிரோசாபாத், மணிப்பூரி, பரூக்பாத், கணுஞ், எட்டுவா, ஹவ்ரிவா, கான்பூர் தெகத், ஹம்பூரிபூர், ஜலுன், மகோபா, ஜான்சி, லலித்பூர், கான்பூர்நகர் ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறு நிலையில், அந்த பகுதிகளில் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையொட்டி இந்த தொகுதிகளில் நேற்று பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

வேலை வாய்ப்பு இல்லை
கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் சுய வேலை வாய்ப்புகளையும் தனது அரசு வழங்கியுள்ளது என முதல்வர் யோகி ஆதித்தியநாத் கூறியிருந்த நிலையில் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில் அகிலேஷ் யாதவ் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளை முறை படுத்துவதாகவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

ராஜ்நாத் சிங் பிரச்சாரம்
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக கடந்த ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்து பேசிய அவர் உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒளி மற்றும் தீபாவளியின் போது பாஜக அரசு இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர் வழங்கும் என பேசினார்.கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த இளைஞ்ஞர்கள் திடீரென்று வேலை வாய்ப்பு கேட்டு கோபமாக முழக்கமிட்டனர். குறிப்பாக இந்திய ராணுவத்தில் வேலை தேடும் இளைஞர்கள் ராஜ்நாத் சிங்கை நோக்கி கோபமாக கேள்வி எழுப்பினர்.

விரைவில் நடவடிக்கை
ராணுவத்தில் ஆட்சேர்ப்பை தொடங்குங்கள், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று அவர்கள் சத்தமாக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது அவர்களைப் பார்த்த ராஜ்நாத் சிங் அது நடக்கும் கவலைப்பட வேண்டாம், உங்கள் கவலை எங்களுக்கு உள்ளது, கொரோனா வைரஸ் காரணமாக சில சிரமங்கள் இருந்தன என்றும் விரைவில் அவை பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் விளக்கியதையடுத்து, அந்த இளைஞர்கள் பாரத் மாதா கி ஜே என கூறி அமர்ந்தனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications