மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆவின் பால் விலை உயர்வு எதிரொலி.. சர்ரென உயரும் டீ, காபி விலை.. மதுரையில் முடிவு! புதிய விலை என்ன?

Google Oneindia Tamil News

மதுரை: தமிழ்நாட்டில் ஆவின் பாலில் ஆரஞ்சு நிற பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுரையில் டீ, காபி விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வணிக ரீதியாக இந்த பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதை வாங்கும் நபர்களுக்கு மட்டும் 12 ரூபாய் உயர்த்தி பால் இனி விற்பனை செய்யப்படும். 48க்கு பதிலாக 60 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என்று கூறினார்.

கடலூர் மாவட்டத்தை விட்டு என்.எல்.சி.உடனடியாக வெளியேற வேண்டும்! பாட்டாளி மக்கள் கட்சி போர்க்கொடி!கடலூர் மாவட்டத்தை விட்டு என்.எல்.சி.உடனடியாக வெளியேற வேண்டும்! பாட்டாளி மக்கள் கட்சி போர்க்கொடி!

பால் விலை

பால் விலை

இந்த பால் பாக்கெட்களை 11 லட்சம் பேர் வாங்கி வருகின்றனர். ஆனால் அதே சமயம் பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அதே 46 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும். பால் அட்டை வைத்து ஆரஞ்சு நிற பால் வாங்கு நபர்களுக்கு அதே விலையில் விற்பனை செய்யப்படும்.இந்த விலை ஏற்றம் காரணமாக நேரமாக மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். தினசரி பால் வாங்கும் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

பால் பாக்கெட்

பால் பாக்கெட்

வணிக ரீதியாக பால் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த விலை ஏற்றம் செய்யப்பட்டு உள்ளது. கடைகளுக்கு மட்டுமே பால் ஏற்றம் பொருந்தும் என்று அமைச்சர் நாசர் விளக்கம் அளித்து உள்ளார். இந்த நிலையில்தான் தற்போது பால் விலை ஏற்றம் காரணமாக தேநீர், காபி விலை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள டீக்கடைகளில் டீ, காபி விலையை ரூ. 15 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆவின் பால் விலை உயர்வு

ஆவின் பால் விலை உயர்வு

ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியாக விலை உயருகிறது. மதுரை மாவட்ட காபி, டீ வர்த்தக சங்கம் இந்த திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த வெளியான செய்தி குறிப்பில், 05.11.2022 முதல் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32 லிருந்து, ரூபாய் 35 ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41 லிருந்து, ரூபாய் 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மக்களுக்கு பாதிப்பு இல்லை

மக்களுக்கு பாதிப்பு இல்லை

இருப்பினும் விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk, நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk, பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும். தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46க்கே புதுப்பிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60 ஆக 05.11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.

கொள்முதல் விலை

கொள்முதல் விலை

உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு நுகர்வோர்களும், சில்லறை விற்பனையாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்தழைப்பு நல்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தபட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு நுகர்வோர்களும், சில்லறை விற்பனையாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்தழைப்பு நல்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

English summary
After Aavin milk price hike, Tea, Coffee price also going up in Madurai .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X