சட்டசபை அமளிக்கு இடையே.. ஆர்.பி.உதயகுமாரை கவனித்தீர்களா.. இதுதான் இவர் நிலைமையா? ஆதரவாளர்கள் அப்செட்
மதுரை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட போதிலும், அதற்கான அங்கீகாரம் பெற முடியாமல் சட்டமன்றம் வரை வந்த முன்னாள் அமைச்சரான ஆர்.பி உதயகுமார் அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டது அவரது ஆதரவாளர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகி வருகிறது உட்கட்சி நிகழ்வுகள்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமுக்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளார் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம். நீதிமன்றம் வரை சென்றும் பொதுக்குழுவை நிறுத்த முடியாத நிலையில் நினைத்ததை முடித்தார் இபிஎஸ்.

ஆர்பி உதயகுமார்
பொதுக்குழுவில் நத்தம் விஸ்வநாதன் கே பி முனுசாமி ஆகியோர் துணை பொது செயலாளர் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவரது முன்னாள் சிஷ்யரான ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமித்தார் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த சில நாட்களாக நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று ஆர்பி உதயகுமாரும் பங்கேற்று வந்தார்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
இதனால் உற்சாகமடைந்த அவரது ஆதரவாளர்கள் மதுரை முழுக்க எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்பி உதயகுமாருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் பிளக்ஸ் என மாஸ் காட்டினர். அதே நேரத்தில் சபாநாயகர் அப்பாவு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் தாமதம் செய்த நிலையில் சட்டமன்ற மாண்பு படி ஓ.பன்னீர்செல்வமே எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தொடர்வதாக அறிவித்ததோடு எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

வெளியேற்ற உத்தரவு
நேற்று ஒட்டுமொத்தமாக அதிமுக உறுப்பினர்கள் சட்டசபை கூட்டத்துடன் புறக்கணித்த நிலையில் இன்றும் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தை எழுப்பி மோதலில் ஈடுபடும் வகையில் நடந்து கொண்ட அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக சட்டசபை வளாகத்தில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவுக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து முழக்கங்களை எழுப்பிய படி எடப்பாடி தரப்பினர் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினர். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களான வைத்தியலிங்கம் ஐயப்பன் உள்ளிட்டோர் அவையில் இருந்தனர்.

ஆதரவாளர்கள் ஏமாற்றம்
எடப்பாடி எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை நியமித்திருந்தாலும் சட்டசபை மாண்பு படி சபாநாயகர் அந்த உத்தரவை அங்கீகரிக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது முன்னாள் அமைச்சர் ஆன ஆர்பி உதயகுமார் தற்போது வரை அந்தப் பதவியைப் பெறவில்லை. மேலும் ஓ.பன்னீர்செல்வமே எதிர்க்கட்சி துணைத் தலைவராக தொடர்கிறார். இதனால் கடந்த சில வாரங்களாக உற்சாகத்தில் இருந்த ஆர் பி உதயகுமார் தரப்பு ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

சபாநாயகர் அப்பாவு
மேலும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக திமுக செயல்படுவதாகவும் சமூக வலைதளங்களில் தங்கள் குமுறலை பதிவு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் குறித்த உத்தரவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் பொறுத்திருந்து பாருங்கள் என அதிமுகவினரை சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பிறகு சபாநாயகர் அப்பாவு தனது முடிவை மாற்றிக் கொள்ளலாம் என இருந்ததாகவும் ஆனால் அதிமுக எம்எல்ஏக்களை செயல்பாடுகளால் அவர் கடும் கோபம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
-
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications