அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதிக்கு மாற்றம் ஏன்? ஆட்சியர் சொன்ன காரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.
மதுரை: பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார். 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் 17ஆம் திங்கட்கிழமைக்கு ஜல்லிக்கட்டுப்போட்டி மாற்றப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் உலக புகழ் பெற்றவை. வெளிநாட்டுப்பயணிகளும் ஜல்லிக்கட்டுப்போட்டிகளைக் காண வருவார்கள். மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரைபோல அவனியாபுரம், பாலமேடு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
பொங்கல் திருநாளான ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். இதற்காக விழாக்குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 15ஆம் தேதி பாலமேடு மஞ்சமலை ஆற்று திடல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக அங்கு வாடிவாசல் அமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
வரும் 16ஆம் தேதியன்று உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோட்டை முனியாண்டி திடலில் நடைபெறும். விழாவிற்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டு அதிகாரப்பூர்வமாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெறும் நாளான ஜனவரி 16ஆம் தேதிக்கு பதிலாக 17ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சேகர், 16ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினத்திற்குப் பதிலாக 17ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெறும்.

நேரலையில் பார்த்து ரசிக்கலாம்
பொது மக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும். ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. வெளியூர் மக்கள் யாரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போட்டிகளை நேரலையில் கண்டு ரசிக்கலாம் என்று தெரிவித்தார்.

150 பார்வையாளர்கள் மட்டுமே
கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்த தமிழக அரசு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வடமாடு, மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் 150 பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காளைகளுடன் காளையின் உரிமையாளர் ஒருவரும், உதவியாளர் ஒருவரும் பங்கேற்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்
எருது விடும் நிகழ்ச்சியில் 150 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்பவர்களும், பார்வையாளர்களும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். போட்டி நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப்போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications