காப்பீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய முக்கியமான தீர்ப்பு
மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மேரி திலகவதி என்ற அரசு ஊழியர் உடல் நலக்குறைவு காரணமாக 2015-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சை பெற்றார். இதற்கான முழு சிகிச்சை தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அரசு ஊழியர்கள் சிகிச்சை செலவுத்தொகை முழுவதையும் வழங்க உரிமை கோர முடியாது என்றும், மருத்துவக்காப்பீடு என்பது கூடுதல் வசதிதான் என்றும் கூறியுள்து.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மேரி திலகவதி என்ற அரசு ஊழியர், கடநத 2015ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்றார். இதற்கான முழு சிகிச்சை தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2016-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, மனுதாரருக்கு உரிய சிகிச்சை தொகை முழுவதையும் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு 2018-ம் ஆண்டில் உத்தரவிட்டார்.

மேல்முறையீடு
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு 2019-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, அரசு ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி சிகிச்சை பெறுகிறார்கள். அரசு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் மருத்துவச் செலவுகள் வேறுபடலாம். அந்தந்த தொகையை அரசு செலுத்துவது என்பது கடினம் ஆகும். எனவே, அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறுவதற்கான தொகை உச்சவரம்பை அரசு நிர்ணயித்து உள்ளது. அதன்படி, மனுதாரர் சிகிச்சை பெற்ற வகையில் ரூ.2 லட்சத்தை பெற உரிமை உண்டு என வாதிட்டார்.
நிபந்தனை இல்லை
விசாரணை முடிவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- மருத்துவ காப்பீட்டு திட்டம், ஒரு நலத்திட்டம் ஆகும். ஆனால் இதனை சேவை நிபந்தனைகளில் ஒன்றாக அரசு ஊழியர்கள் கருத இயலாது. இது, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் வசதி மட்டுமே. எனவே, இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு கவனமுடன் செயல்படுத்த வேண்டும்.
மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
மேலும் மருத்துவ காப்பீட்டுத்திட்டம் ஒரு சிறப்புத் திட்டமாக உள்ளது. எனவே இந்த திட்டத்தை தகுதி மற்றும் வரம்பின் அடிப்படையில் உறுதி செய்து செயல்படுத்த வேண்டும். அதன்படி மனுதாரர் தனக்கு சிகிச்சைக்காக செலவு செய்த தொகை முழுவதையும் வழங்கும்படி உரிமையாக கோர முடியாது. இதனை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை.
மருத்துவ காப்பீட்டு உச்சவரம்பு
இதில் உச்சவரம்பை கருத்தில் கொள்ளாமல் முழு மருத்துவச் செலவையும் வழங்கினால், அது அரசு ஊழியர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் தங்கள் விருப்பப்படி சிகிச்சை பெறும் சூழ்நிலைக்கு வழிவகுக்கும். மேலும் மருத்துவச் செலவுகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம். அரசு ஊழியர்களிடையே சமமான தன்மையை பேணுவதற்காக சிகிச்சைக்கான செலவை திரும்ப பெறுவதில் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே தனிநீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications