நடிகர்கள் பொறுப்பா இருக்கனும்! இதெல்லாம் தேவையா? கடுப்பான இயக்குனர் அமீர்! இதுதான் காரணமா?
மதுரை : ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டு விளம்பரங்களில் நடிகர்கள் பங்கேற்பதில் நடிகர்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நடிகர்களை திரையரங்குகளில் மட்டும் பார்த்து சந்தோஷப்பட வேண்டும் என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி காரணமாக தமிழகத்தில் கொலை, தற்கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள், காவலர்கள், தொழிலதிபர்கள் என தற்கொலை பட்டியல் நீண்டு வருகிறது.
இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் ரம்மி விளம்பரங்களில் நடிப்பதை நடிகர்கள் நிறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை உள்ளது.

ஆன்லைன் ரம்மி விவகாரம்
இந்நிலையில்," ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டு விளம்பரங்களில் நடிகர்கள் பங்கேற்பதில் நடிகர்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் நடிக்ர் அமீர் கூறியுள்ளார். மதுரையில் உள்ள நான்காம் தமிழ்ச்சங்க செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைக் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திரைப்பட இயக்குனர் அமீர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாடினார். தொடர்ந்து கல்லூரி நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பழங்கால ஓலைச்சுவடிகள் மற்றும் அரியவகை புத்தகங்களை பார்வையிட்டார்.

இயக்குனர் அமீர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரைப்பட இயக்குனர் அமீர்;" மதுரையில் உள்ள பழமை வாய்ந்த நான்காம் தமிழ்ச்சங்க செந்தமிழ் கல்லூரி தனித்து விடப்பட்ட தீவு போல் உள்ளது. 1903 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் நான்காம் தமிழ்ச்சங்க செந்தமிழ் கல்லூரியை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துடன் இதுவரை இணைக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
இக்கல்லூரி தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டியது மிக அவசியமாக உள்ளதால் தமிழக முதல்வர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . கீழடிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மதுரை செந்தமிழ் கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நடிகர்கள் பொறுப்பு
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டு விளம்பரங்களில் நடிகர்கள் பங்கேற்பதில் நடிகர்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நடிகர்களை திரையரங்குகளில் மட்டும் பார்த்து சந்தோஷப்பட வேண்டும், நடிகர்களை வீட்டிற்கு சுமந்து செல்ல கூடாது. ரசிகர்கள் நடிகர்களை திரையரங்குகளோடு ரசிப்பது மட்டுமே ஆகச்சிறந்தது." என பேசினார்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications