தென்மாவட்டங்களில் விடாது கொட்டிய மழை..பெருகிய வெள்ளம்..நிரம்பும் அணைகள்..அருவிகளில் குளிக்கத் தடை
மதுரை: தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக, நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 4 குழுக்கள் சென்றுள்ளன.

அதிகனமழை வெள்ளம்
நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், சுசீந்திரம், தாழக்குடி, பூதப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளில் 4 மணிநேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

அருவிகளில் குளிக்கத் தடை
குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு, பகல் என நாள்முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக அணைகள் ஆறுகள் என அனைத்தும் நிரம்பு வருகின்றன. கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியிலும் தடுப்பு வேலிகளைத் தாண்டி, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பு
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. மழை காரணமாக சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

வைகை ஆற்றில் வெள்ளம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 71 அடிய உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 69 அடிக்கு தண்ணீர் அதிகரித்துள்ளது. வைகை ஆற்றின் கரையோர மக்களுக்குநேற்று முன்தினம் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் நேற்றும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால், கரையோர மக்களுக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

வெள்ள அபாய எச்சரிக்கை
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட வெள்ளை அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தற்போது அணைக்கு 2,634 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், நீர்மட்டத்தை 70 அடி வரை உயர்த்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்திருப்பதால்,இன்று மாலை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்த பின்னர் உபரி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications