தென்காசி கிருத்திகா கடத்தல் வழக்கு.. பெற்றோரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி

தென்காசியில் கிருத்திகா கடத்தல் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: தென்காசியில் கிருத்திகா என்ற பெண்ணை அவரது பெற்றோர் கடத்தியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கிருத்திகாவின் பெற்றோர் உள்ளிட்ட 8 பேரின் முன் ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

தென்காசி இலஞ்சி அடுத்துள்ள கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் வினித். இவர் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் நவீன் பட்டேல் குஜராத்தைச் சேர்ந்தவர், இவர் கடந்த 20 ஆண்டுகளாகத் தென்காசியில் மரக்கட்டை ஒன்றை நடத்தி வருகிறார். நவீன் பட்டேல் மகன் கிருத்திகாவும் வினித்தும் சிறு வயதில் இருந்தே ஒன்றாகப் படித்துள்ளனர்.

தென்காசி

தென்காசி

இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி இந்த ஜோடி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், பெண் வீட்டாரிடம் இருந்து எதிர்ப்பு வரவே, அதற்கு அஞ்சி இவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்தச் சூழலில் சில வாரங்களுக்கு முன்பு, தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் வினித்- கிருத்திகா இருந்த வீட்டிற்கு வந்த பெண்ணின் வீட்டார் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கிருத்திகாவையும் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றுள்ளனர்.

கடத்தல்

கடத்தல்

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், கிருத்திகாவுக்கு ஏற்கெனவே உறவினர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும் அதற்கான ஆதாரத்தையும் அவரது தந்தை நவீன் பட்டேல் மாவட்ட எஸ்.பி சாம்சனிடம் சமர்ப்பித்திருந்தார். மேலும், கிருத்திகாவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தனக்கு மைத்தீரிக் பட்டேல் என்பவருடன் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டதாகவும் தான் நலமாக இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

 பெரிய ட்விஸ்ட்

பெரிய ட்விஸ்ட்

மேலும், தனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை என்று குறிப்பிட்ட அவர், என்னால் எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட வேண்டாம் என்றும் என்ன நடந்ததோ அது தனது விருப்பப்படியே நடந்தது என்று கூறி அதிர வைத்தார். இது ஒரு பக்கம் இருக்க.. வினித் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், "நவீன் படேல், மகள் கிருத்திகாவும், நானும் கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்தோம். இருவரும் கடந்த டிசம்பர் 27இல் நாகர்கோவிலில் பதிவு திருமணம் செய்தோம்

 நீதிமன்றத்தில் வழக்கு

நீதிமன்றத்தில் வழக்கு

இந்தச் சூழலில் கடந்த ஜனவரி மாதம் நவீன் பட்டேல் கும்பலுடன் வந்து என்னைத் தாக்கி, என் மனைவி கிருத்திகாவை கடத்தி சென்றார். இப்போது என் மனைவி எங்கே உள்ளார் எனத் தெரியவில்லை. என் மனைவியை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். அதேபோல இந்த வழக்கில் கிருத்திகா பெற்றோர் தாக்கல் செய்த மனுவில், "வினித்திற்கும் கிருத்திகாவுக்கும் இடையே திருமணம் நடைபெறவில்லை. அவர்கள் காதலிக்கவும் இல்லை.. கிருத்திகாவிற்குக் கடந்த அக்டோபர் மாதமே வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிட்டது.. எங்களுக்கு இந்த வழக்கில் ஜாமின் தர வேண்டும்" என்று கூறியிருந்தார்.

 அரசு தரப்பு வழக்கறிஞர்

அரசு தரப்பு வழக்கறிஞர்

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நவீன் பட்டேலின் மனைவி தர்மிஷ்தா பட்டேல், விஷால் உள்ளிட்ட 8 பேர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர், "கடந்த அக். மாதம் கிருத்திகாவுக்குக் குஜராத்தில் நிச்சயதார்த்தம்தான் நடந்துள்ளது. திருமணம் நடக்கவில்லை. அதன் பிறகே அவர் தென்காசி வினித் என்பவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். அது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காதல் திருமணத்தை ஏற்காமல் ஜனவரி 25ஆம் தேதி கிருத்திகாவை அவரது பெற்றோர் கடத்தி சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளன. கிருத்திகா கடத்தப்படுவதற்கு முன்பும் பின்பும் பேசுவது முரணாக உள்ளது" என்றார்.

 நீதிபதிகள்

நீதிபதிகள்

மேலும், கிருத்திகா அவரது பெற்றோரால் மூளைச் சலவை செய்யப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த வழக்கில் ஜாமீன் என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில், கிருத்திகா தன்னை தன்னை யாரும் கடத்தவில்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த கடத்தல் வழக்கில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதே நேரம் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆணவத்துடன் கிருத்திகாவைக் கடத்தியதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளன. எனவே கடத்தல் விவகாரத்தில் முழு விசாரணை தேவை. கிருத்திகா பெற்றோரால் அச்சுறுத்தப்பட்டிருக்கலாம் என்று அரசு தரப்பில் கூறுகிறது.

தள்ளுபடி

தள்ளுபடி

கிருத்திகா கடத்தல் வழக்கில் நேரடியாகத் தொடர்பில்லாத ஐந்து பேர் ஜாமீன் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் கிருத்திகா கடத்தலுக்கு உடந்தையாகக் கூட்டுச் சதியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கு நேரடியாகத் தொடர்பில்லை என்பதால் அவர்களுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது. அதேநேரம் 8 பேரின் முன் ஜாமீன் மனுக்களைப் பொருத்தவரை பட்டப்பகலில் கிருத்திகாவைக் கடத்தியதற்கு ஆதாரங்கள் இருக்கிறது. இதில் விசாரணை தேவைப்படுவதால் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது": என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+