இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்படும் - மதுரை கூட்டத்தில் சு.சுவாமி ஆரூடம்!
மதுரை: இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்படப் போவதாக பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில், பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியின் 83-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள். சுப்பிரமணியன் சுவாமியை வாழ்த்துப் பேசினர்.
இதனைத் தொடர்ந்து, விழாவில் சுப்பிரமணியன் சுவாமி பேசியபோது, சுதந்திரம் பெற்ற பிறகு, மெதுவாக இந்தியா சொந்த காலில் நிற்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் பெரும் மாற்றம் வரப் போகிறது. நாட்டின் காலாச்சாரத்தை வெள்ளைக்காரர்கள் அழித்ததால், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம்.

தற்போது, அதிலிருந்து மீண்டு, சொந்த காலில் நிற்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறோம். இந்த நாட்டை யாரும் பிரிக்க முடியாது. ஒரு நாடு சிறந்து விளங்க வேண்டுமானால், பொருளாதாரக் கொள்கை, ராணுவக் கொள்கை பலமாக இருக்க வேண்டும்.
தமிழர்கள் அறிவு உள்ளவர்கள். ஆனால், தைரியம் இல்லாதவர்கள். எனவே, புதிய தமிழர்களை உருவாக்க வேண்டும். என்னை ஏன் இவ்வளவு தைரியமாக இருக்கிறீர்கள் என வட மாநிலத்தில் உள்ள தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். புதிய தமிழனை உருவாக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினையை உண்டாக்கினார்கள். ஆரியன், திராவிடன் என்ற வார்த்தை இல்லை. தமிழகத்தில் அடுத்த சட்டசபைத் தேர்தலில், ஒரு மாற்றுக் கட்சியாக பாஜக வரும்.
இந்திய ராணுவத்தினரை கொலை செய்த விடுதலைப் புலிகளுக்கு இங்கே சிகிச்சை அளக்கக்கூடாது என நான் கூறினேன். அப்படி சிசிக்சை அளித்தால் ஆட்சி கலைக்கப்படும் எனவும் தெரிவித்தேன். அவ்வாறு எச்சரித்தும் கேட்காததால், கடந்த 1991-ம் ஆண்டு திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அடுத்த 2 மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
தமிழகத்தில் உள்ள 22 கோயில்களில் டிரஸ்டிகளை நீக்கிவிட்டு, அந்தந்த கோயில்களில் என்ன பூஜை நடக்க வேண்டும் என பூசாரிகளே தீர்மானிக்க வேண்டும். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன் என, பிறந்த நாள் கூட்டத்தில், சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
-
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications