இனி ஒரு கள்ளக்குறிச்சி வேண்டாம்.. போலீசை மட்டும் குறைசொல்லக்கூடாது! முன்னாள் டிஜிபி ரவி
மதுரை: ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை உளவியல் ரீதியாக புரிந்து கொண்டு குடும்பத்தினர் போல நடந்துகொண்டால் எந்தப்பிரச்சனையும் இருக்காது என்றும் கள்ளக்குறிச்சி சம்பவம் போல இனி நடக்கக்கூடாது எனவும் என முன்னாள் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி ரவி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் நர்சிங் பயின்று முடித்த மாணவிகளுக்கு பட்டம் வழங்கி கவுரவித்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

முன்னாள் டிஜிபி ரவி பேச்சு
அப்போது பேசிய அவர், "கள்ளக்குறிச்சி சம்பவம் போல அசம்பாவித சம்பவம் இனி நடக்காது என்று நம்புவோம். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து காவல்துறை ஒரு விசாரணை குழு அமைத்துள்ளது. நீதிமன்றம் இதைப் பற்றி கருத்து கூறியுள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் போல இனி ஒரு சம்பவம் எந்த ஒரு இடத்திலும் நடக்கக்கூடாது, நடைபெற விடக்கூடாது." என்றார்.

காவல்துறை தவறா?
தமிழக உளவுத்துறை பிரிவு தோல்வியடைந்ததாக கூறுகிறார்களே என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இதில் ஒரேயொரு பிரிவை மட்டும் குறை சொல்லக்கூடாது. என்ன நடந்தது? எப்படி நடந்தது? திடீரென்று எப்படி வந்தார்கள்? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நிச்சயமாக உளவுத்துறை முதலிலேயே தகவல் சொல்லி இருப்பார்கள். 32 வருடங்களாக நான் காவல்துறையில் இருப்பதால் அது எனக்கு நன்றாக தெரியும்.

மதிப்பெண் முக்கியமல்ல
மாணவிகள் படிக்கும் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது நம்முடைய நோக்கம் அல்ல. நம்மால் படிக்க முடியவில்லை என்றாலும், அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என்றாலும், நீட் தேர்வில் தேர்வடைய முடியவில்லை என்றாலும் நம்பிக்கையை விடக்கூடாது, மனம் தளர்ந்து விடக்கூடாது. பெற்றோர்கள் முதல் மதிப்பெண் எடுங்கள் என கட்டாயப்படுத்தக்கூடாது. ஆசிரியர்கள் கவனக்குறைவாக படிக்கும் மாணவர்களை புரிந்து கொண்டு சரியான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு அறிவுரை
மாணவர்களை திட்டுவது மற்ற மாணவர்கள் முன் அவமானப்படுத்துவது கூடாது. ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை உளவியல் முறைப்படி தெரிந்து கொண்டு தங்களுடைய குடும்பத்தினர் போல நடந்துகொண்டால் நிச்சயமாக எந்த பிரச்சினையும் இருக்காது. மாணவிகள் மாணவர்கள் நம்பிக்கைடன் இருக்க வேண்டும்." என்று பேசினார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications