மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டமுக்கு டமுக்கு டமுக்கு.. மதுரை குலுங்க.. ஆஹா கலைஞர்கள்.. வித்தியாசமான புயல் நிவாரண நிதி!

தெருக்கூத்து நடத்தி மதுரை நாட்டுப்புற கலைஞர்கள் நிதி திரட்டினார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்டா மக்களுக்காக புயல் நிவாரண நிதி திரட்டும் நாட்டுப்புறக் கலைஞர்கள்-வீடியோ

    மதுரை: மாட்டுதாவணி மார்கெட்டில் ஊரே வேடிக்கை ஒரே ஆட்டமும், பாட்டமுமா இருந்தது. என்னவென்று விசாரித்தால், "நீங்கள்ளாம் தான் உதவி செய்வீங்களா? ஊருக்கே சோறு போட்ட மக்களுக்கு நாங்களும் ஆடியே நிதி திரட்டி உதவி செய்வோம்?ல்லே என்று சொல்கிறார்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கைதூக்கி விட தமிழகமே முயன்று வருகிறது. அதற்கு மதுரை நாட்டுப்புறக் கலைஞர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வாதாரத்தை சீரமைக்க நல்லுள்ளங்கள் உதவி செய்து வரும் நிலையில், தமிழ்நாடு நாட்டுப்புற இசை பெருமன்றமும் அதில் இணைந்துவிட்டது.

     மாட்டுத்தாவணி

    மாட்டுத்தாவணி

    மதுரையில் 100க்கும் மேற்பட்ட இக்கலைஞர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் சுழன்று சுழன்று ஆடினார்கள். தங்களின் கலைகளை அனைத்தையும் மக்கள் மத்தியில் இறக்கி கைதட்டலை அள்ளினார்கள். குறிப்பாக மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வளாகத்தையே ரொம்ப அமர்க்கப்படுத்தி விட்டார்கள்.

     பூரித்த மக்கள்

    பூரித்த மக்கள்

    மார்க்கெட்டுக்கு வந்த மக்கள், அங்கே கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் ஆட்டம், குதிரையாட்டம் , நையாண்டி, தப்பாட்டம் என ஒவ்வொன்றையும் பார்த்து பிரமித்து நின்றார்கள். புயலுக்காகத்தான் இப்படி ஆடுகிறோம் என்று சொன்னதும் மக்கள் இன்னமும் பூரித்தே போய்விட்டார்கள். தெருக்கூத்து நடத்தி உதவ நினைத்த இக்கலைஞர்களை சுற்றியிருந்தவர்கள் பெரிதும் கைதட்டி ஆரவாரம் செய்து ஊக்குவித்தனர்.

     உதவிகள் குவிகின்றன

    உதவிகள் குவிகின்றன

    அது மட்டும் இல்லை, மதுரை மாட்டுத் தாவணியில் இருந்து திருப்பரங்குன்றம் வரை சுமார் 15 கிமீ தொலைவிற்கு நடந்தே சென்று இந்த நிதி மற்றும் நிவாரண பொருட்களை திரட்டி போவதாகவும் சொன்னார்கள். இதைக்கேட்டதும் உதவிகள் அவர்களிடத்தில் குவிந்து வருகிறது.

    மெச்சத்தக்கது

    மெச்சத்தக்கது

    நாட்டுப்புற கலை என்பது பழமையான கலையாகும். இது தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இந்த கலையை இன்னமும்
    ஜீவநாடியாக நினைத்து வாழ்வாதாரத்தை ஓட்டி வருபவர்கள் பலர் இன்னமும் இருக்கிறார்கள். இதுவரை தங்கள் வயிற்று பிழைப்புக்காகவும், தீராத கலை தாகத்திலும் ஈடுபட்டு வந்த இக்கலைஞர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இப்படி பொதுவெளியில் சுழன்று சுழன்று ஆடியது உண்மையிலேயே பாராட்டத்தக்கது... போற்றத்தக்கது... மதிக்கத்தக்கது... வரவேற்கத்தக்கது... மெச்சத்தக்கது!!!

    English summary
    Madurai Artists Performing Therukoothu and collected Gaja Relief Fund
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X