Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேவர் தங்க கவசம்.. பரபரப்பு தீர்ப்பு.. “டிஆர்ஓ பொறுப்பில்”.. ஓபிஎஸ், ஈபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

மதுரை : தேவர் தங்கக் கவசத்தை தங்களிடம் வழங்கவேண்டும் என்ற ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு கோரிக்கைகளை நிராகரித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. தேவர் தங்கக் கவசத்தை மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் தேவர் ஜெயந்தி வரும் 28ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து பெற்று ஒப்படைப்பது தொடர்பாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே போட்டா போட்டி நடந்து வருகிறது.

தேவரின் தங்கக் கவசத்தை பெறப் போவது யார் என்பது இன்று தெரியவரும். இந்த வழக்கின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில் இருக்கும் அதிகாரத்தை தெளிவுபடுத்தும் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தேவர் தங்க கவசம்

தேவர் தங்க கவசம்

முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை நிகழ்வையொட்டி, பசும்பொன்னில் அமைந்திருக்கும் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் அணிவிக்கப்படும் தங்க கவசத்தை வங்கியிடம் பெற்று விழா கமிட்டியிடம் ஒப்படைக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புகள் மோதி வருகின்றன. ஜெயலலிதாவால் அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தை தங்கள் தரப்பிடம் ஒப்படைக்கக் கோரி இரு தரப்பினரும் வங்கியில் கடிதம் அளித்துள்ளனர். இதனால், வங்கி நிர்வாகம் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

திண்டுக்கல் சீனிவாசன் மனு

திண்டுக்கல் சீனிவாசன் மனு

இந்நிலையில், தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட 13 கிலோ தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச் செல்லும் பொறுப்பை தங்களுக்கு வழங்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பவானி சுப்புராயன் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

அதிமுக பொருளாளர்

அதிமுக பொருளாளர்

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தற்போது இடைக்கால கழக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். அதிமுகவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் அனைத்து வங்கி கணக்குகளிலும் தற்போது வரவு செலவுகளை செய்து வருகிறார். இந்நிலையில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை வருகின்ற 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு அதிமுக தரப்பில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது.

இருதரப்பு வாதம்

இருதரப்பு வாதம்

அதனை பேங்க் ஆப் இந்தியா கிளையிலிருந்து எடுத்துச் செல்வதற்கு எங்களுக்கு அனுமதி கோரி வங்கி கிளையில் மனு செய்திருந்தோம். வங்கி மறுத்துவிட்டது. எனவே அதிமுக தரப்பில் பொருளாளராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் வசம் தங்கக் கவசத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் மற்றும் பழனி முன்னாள் எம்.எல்.ஏவான வழக்கறிஞர் சுப்புரத்தினம் ஆகியோர் ஆஜராகி அதிமுக உட்கட்சி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு தங்க கவசம் கொடுக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீதிமன்ற முடிவை ஏற்கிறோம்

நீதிமன்ற முடிவை ஏற்கிறோம்

மேலும் தங்கள் தரப்பையும் இந்த வழக்கில் மனுதாரராக இணைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் தரப்பில் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ அதைப் பின்பற்ற தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மதுரை பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தரப்பிலும் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவிற்கு கட்டுப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

அதிகாரம் யாருக்கு?

அதிகாரம் யாருக்கு?

தேவர் தங்கக் கவசம் பெறுவது ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்புக்கும் கௌரவப் போட்டியாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை நிறுவுவதற்கான வாய்ப்பாக இதனை இரு தரப்புமே கருதுகிறது. மேலும், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கான உரிமை எந்தளவுக்கு என்பதும் இந்தத் தீர்ப்பின் மூலம் தெரிய வரும் என்பதால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்து வருகின்றனர்.

 சற்று நேரத்தில்

சற்று நேரத்தில்

இந்நிலையில், இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில் தீர்ப்பு 4 மணிக்கு ஒத்துவைக்கப்பட்டுள்ளது. தேவர் தங்கக் கவசம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கா? ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கா? அல்லது 2017 போல மாவட்ட ஆட்சியர்கள் வசம் ஒப்படைக்கப்படுமா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குவிக்கப்பட்ட போலீசார்

குவிக்கப்பட்ட போலீசார்

இந்நிலையில், தேவர் தங்கக் கவசம் உள்ள மதுரை பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் முன் மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினர் தங்க கவசத்தை பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல தயார் நிலையில் உள்ளனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

ஓபிஎஸ் ஈபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு

ஓபிஎஸ் ஈபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச் சென்று அணிவித்து, மீண்டும் வங்கியில் ஒப்படைக்கும் பொறுப்பை தங்களிடம் வழங்கவேண்டும் என்ற ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்துள்ளது.

ராமநாதபுரம் டி.ஆர்.ஓ பொறுப்பில்

ராமநாதபுரம் டி.ஆர்.ஓ பொறுப்பில்

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் டி.ஆர்.ஓ, தேவர் நினைவிட பொறுப்பாளர் இணைந்து தேவர் தங்கக் கவசத்தை பெற்றுக்கொள்ள ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+