"நாட்டு மாடு.." ஜல்லிக்கட்டு குறித்து.. முக்கிய அப்டேட் கொடுத்த அமைச்சர் பி.மூர்த்தி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 3 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குக்கிராமத்தில் நமது கலாசார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் என களைகட்டும்.

மேலும், பொங்கல் பண்டிகை என்றவுடன் சட்டென நினைவுக்கு வருவது நமது வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள்தான். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

 ஜல்லிக்கட்டு போட்டி

ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவினியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடத்தபடும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்புபெற்றவை. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோது அதனை எதிர்த்து தமிழகமே திரண்ட வரலாறு உண்டு. இப்படி நமது உணர்வோடு கலந்து விட்ட ஜல்லிக்கட்டு போட்டி குறித்த அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் தமிழக அமைச்சர் பி.மூர்த்தி.

நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி

நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அனுமதி பெற்றது திமுகதான்

அனுமதி பெற்றது திமுகதான்

இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று கூறிய அவர் கலப்பின மாடுகள் கொண்டு வருவோருக்கு டோக்கன் கொடுக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.

நாட்டு மாடுகள் இனம்

நாட்டு மாடுகள் இனம்

நாட்டு மாடுகள் இனத்தை காப்பாற்றுவதற்காகவே நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த கால ஆட்சியை போல் இல்லாமல் முறையாக ஜல்லிக்கட்டை நடத்துவோம். நாட்டு மாடு இனங்களை அபிவிருத்தி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+