Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுயநலம்.. பெரிய பதவி கொடுக்கலாம்னு பேசிக்கிட்டு இருந்தாரு.. போட்டு உடைத்த ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ!

Subscribe to Oneindia Tamil

மதுரை : கோவை செல்வராஜூக்கு தலைமை நிலைய செயலாளர் பதவி வழங்குவது தொடர்பாக ஓபிஎஸ் ஆலோசித்து வந்த நிலையில் அவர் திமுகவில் இணைந்துள்ளார் என ஓபிஎஸ் அணி எம்எல்ஏ ஐயப்பன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை மீட்கும் முயற்சியில் ஓபிஎஸ் போராடி வரும் நிலையில் சுயநலத்திற்காக கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளார். இதனால், ஓபிஎஸ் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு இடையே, ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பினரை கடுமையாக தாக்கிப் பேசி வந்த கோவை செல்வராஜ், ஓபிஎஸ் அணியில் இருந்து மொத்தமாக விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

ஓபிஎஸ் அணியின் முக்கிய புள்ளி

ஓபிஎஸ் அணியின் முக்கிய புள்ளி

ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிர்வாகியாகச் செயல்பட்டு, எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த கோவை செல்வராஜ், அதிமுகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எடப்பாடி, ஓபிஎஸ் இருவரோடும் சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக சண்டைபோடுகிற இவர்களுடன் சேர்ந்து நாமும் கட்சியை அழிக்கிற முயற்சியில் ஈடுபடக்கூடாது என முடிவெடுத்து இவர்களிடமிருந்து விலகுகிறேன் என அறிவித்தார்.

3 டூ 4

3 டூ 4

கோவை செல்வராஜின் விலகல் ஓபிஎஸ் அணியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சில மணி நேரத்திலேயே அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். அவர் வகித்து வந்த கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து கோவை மாவட்டத்தை நான்காகப் பிரித்து, 4 மாவட்டச் செயலாளர்களை நியமித்து ஓபிஎஸ் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்.

இங்க வாங்க எல்லோரும்

இங்க வாங்க எல்லோரும்

திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை செல்வராஜ், தற்போது அதிமுக 4 அணியாக பிரிந்து ஒரு கம்பெனி போல் செயல்படுவதாகவும் இன்னும் ஆறு மாத காலத்தில் அந்த கம்பெனி இருக்காது என்றும், விரைவில் அதில் இருக்கக்கூடிய உண்மையான அதிமுக தொண்டர்கள் தாய்க்கழகமான திமுகவில் இணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதிமுகவில் கடந்த 7 ஆண்டுகளாக பயணித்து எடப்பாடி பழனிசாமிக்கு வக்காலத்து வாங்கியதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

தலைமை நிலைய செயலாளர் பதவி

தலைமை நிலைய செயலாளர் பதவி

இந்நிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ் ஆதரவாளரும், மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், "அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒபிஎஸ் போராடி வருகிறார். கோவை மாவட்டத்தில் நிர்வாகிகளை நிர்ணயம் செய்வது, அவர்களை கையாள்வதில் தொய்வு காட்டியதால் கோவை செல்வராஜை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் செய்திருந்தார். அவருக்கு தலைமை நிலைய செயலாளர் பதவி வழங்குவதற்கான ஆலோசனையில் ஓபிஎஸ் ஈடுபட்டிருந்த சூழலில் அவர் திமுகவில் இணைந்துள்ளார்.

பாதிப்பு இல்லை

பாதிப்பு இல்லை

மாவட்ட செயலாளரை விட தலைமை நிலைய செயலாளர் பதவி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உயரிய பதவி, அதை வேண்டாம் என புறம் தள்ளிவிட்டு தனது சுயநலத்திற்காக திமுகவில் இணைந்துள்ளார். அவர் திமுகவிற்கு சென்றதால் ஓபிஎஸ் அணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

பதவிக்கு தகுதி

பதவிக்கு தகுதி

முன்னதாக, ஓபிஎஸ் அணி நிர்வாகி நாஞ்சில் கோலப்பன், கோவை செல்வராஜ், அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பதவி கேட்டு கடந்த ஒரு மாதமாகக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார். ஓபிஎஸ்ஸையே மிரட்டினார். ஆனால், அந்த பதவிக்கு அவர் தகுதியானவர் கிடையாது என்பதால், ஓபிஎஸ் அவர் மிரட்டலுக்குப் பணியவில்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+