விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது - தவெக அருண்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு
மதுரை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தவெக மற்றும் விஜய்க்கு பல வகைகளில் பாஜக அழுத்தம் கொடுக்கிறது. அந்த நெருக்கடிகளை தாண்டி பாஜகவை எதிர்த்து வருகிறோம் அருண்ராஜ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது [TVK Arunraj].
தவெக கொள்ளை பரப்பு பொதுச்செயலாளர் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் தவெகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தவெகவின் கொள்கைகளில் ஒன்று. அதனால் தான் அதை முதல் மாநாட்டிலேயே அறிவித்தோம். மற்றக் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்பதற்காக அதைச் சொல்லவில்லை.

மக்களின் நம்பிக்கை
தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் சொல்லாத ஒரு விஷயத்தை, சமூக நீதி கட்சியான நாங்கள் சொல்லியுள்ளோம். கூட்டணி குறித்த இறுதி முடிவை எங்கள் தலைவர் எடுப்பார். திமுக மோசமான ஆட்சியை செய்து வருகிறது. குடும்ப ஆட்சியால் யாருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஊழல் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு மோசமடைந்து மக்கள் இந்த ஆட்சி மீது கடும் கோபத்தில் இணைந்துள்ளனர்.
திமுகவுடன் தேமுதிக இணைந்துள்ளனர். தோற்கிற கட்சியுடன் இணைந்து தோற்பது அவர்களின் முடிவு. தவெக சார்பில் அதிகாரபூர்வமாக விசிக உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை. தமிழ்நாட்டில் 90 சதவீத பொது மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இதற்கு முன்பு இளைஞர்கள் அரசியலை தூரத்தில் இருந்துதான் பார்த்தார்கள். அவர்களின் நம்பிக்ய்யை தவெக பெற்றுள்ளது.
திமுக தேமுதிக கூட்டணி
திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை பிப்ரவரி 22 ஆம் தேதி தானே தொடங்குவார்கள் என்றனர். திடீரென எப்படி தேமுதிக கூட்டணியில் இணைந்தது. இது திமுகவின் பயத்தைத்தான் காட்டுகிறது. தவெகவிற்கு பெருகி வரும் ஆதரவை பொருத்துக் கொள்ள முடியாமல் தேமுதிகவை அழைத்து வந்துள்ளனர். மற்றக் கட்சிகள் ஒரு கூட்டம் நடத்த எளிதில் அனுமதி வழங்கிவிடுகிறார்கள்.
தவெகவுக்கு அப்படி உடனடியாக அனுமதி கொடுப்பதில்லை. நாங்கள் ஒரு மாதம் முன்பே திட்டமிட்டாலும் ஆளுங்கட்சி அனுமதி மறுக்கிறார்கள். சேலத்தில் நடைபெற்றது வருத்தமான விஷயம். சேலத்தில் இறந்த இளைஞருக்கு 6 மாதங்களுக்கு முன்பு ஆஞ்சியோ செய்துள்ளனர். இனி வரும் காலங்களில் அப்படி ஒரு நிகழ்வு நடக்க கூடாது என்பதுதான் எங்களின் விருப்பம்.
பாஜக அழுத்தம்
முதல் மாநாட்டிலேயே பாஜகவை கொள்கை எதிரியாகவும், திமுகவை அரசியல் எதிரி என்றும் அறிவித்தவர் விஜய். முதல் கூட்டத்திலேயே 2 ஆளுங்கட்சிகளை எதிர்க்க துணிந்தார். இந்தக் குற்றச்சாட்டை ஏற்கவே முடியாது. தவெகவுக்கு பல வகையில் பாஜக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. மகாபலிபுரத்தில் மதவாதி சக்தியுடன் கூட்டணி இல்லை என நேரடியாக அறிவித்துள்ளார்.
சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படம் பிரச்சனை அனைவருக்கும் தெரியும். விஜய்க்கு பாஜக அரசு அழுத்தம் கொடுக்கிறது. இவ்வளவு அழுத்தத்திற்கு பிறகும் அவர் மதவாத சக்தியுடன் கூட்டணி என்று தெளிவாக சொல்லியுள்ளார். இதைவிட வேறு எப்படி சொல்ல வேண்டும். தேர்தலுக்கு முன்பாக உரிய நேரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்" என்றார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா?












Click it and Unblock the Notifications