பெட்டி பெட்டியாய் பணம்! அள்ள அள்ள குறையாத ஆவணங்கள்! மிரண்டு போன ஐடி அதிகாரிகள்! பரபர பின்னணி..!
மதுரை : மதுரையில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் ஜெயபாரத், கிளாட்வே சிட்டி நிறுவனங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அங்கு மட்டும் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய சுமார் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதேபோல் சோதனை நடைபெறுவது அடுத்தடுத்து வெளியான தகவல்களின் படி உறுதியானது.

வருமான வரித்துறை சோதனை
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டி மற்றும் மார்க்கம்பட்டி ஆகிய இரு பகுதிகளில் ஆர் ஆர் இன்ஃப்ரா ப்ளூ மெட்டல் கன்ஸ்ட்ரக்ஷனிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு ஒப்பந்ததாரர்களுடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடந்து வருகிறது.

வரி ஏய்ப்பு புகார்
இந்நிலையில், வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இதேபோல், மதுரையில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயபாரத் நிறுவனத்தின் அன்னை பாரத் சிட்டி மற்றும் கிளாட்வே கிரீன் சிட்டி, கிளாட்வே சிட்டி போன்ற நிறுவனங்களின் வீடுகள், அலுவலகங்களில், வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டுக்கட்டாக பணம்
இந்த சோதனையில், கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றனர். கைப்பற்றப்பட்ட பணத்தை நான்கிற்கும் மேற்பட்ட பெட்டிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசார், நள்ளிரவு நேரத்தில் இரண்டு கார்களில் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. மேலும், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

3வது நாளாக சோதனை
பல்வேறு ஆணவங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், 3வது நாளாக இன்றும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறையினரின் சோதனைக்குப் பிறகே, முழுமையான தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்த அதிரடி சோதனை இன்னும் வரும் நாட்களில் பல்வேறு இடங்களில் தொடரும் என கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications