புதிய கல்விக் கொள்கையை ஏன் கொண்டு வருகிறோம் தெரியுமா? மத்திய அமைச்சர் முருகன் விளக்கம்
மதுரை: தாய் மொழியில் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக தான் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை பங்கேற்றார். முன்னதாக ஆளுநர் ஆர்.என். ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை காமராஜர் பல்கலைக் கழக வெளிப்புறத்தில் கறுப்புக்கொடியுடன் தமமுக மற்றும் சம நீதி அமைப்பு சார்பாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த, மீனாட்சி ஆளும் மதுரையில் குரு பூர்ணிமா நாளில் பட்டமளிப்பு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்கள் உலகம் முழுவதிலும் ஆட்சி செய்து வருகிறார்கள். உலகை ஆளும் சக்தி கொண்டது தமிழகத்தின் சக்திவாய்ந்த மனிதர்கள் தான். கூகுள் சுந்தர்பிச்சை, சிவநாடார், விஷ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பெருமை சேர்த்து வருகின்றனர்.

மோடியும் - தமிழும்
தமிழ் மொழியை உலகம் முழுவதிலும் எடுத்து சென்றவர் பிரதமர் மோடி. ஐநா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என கூறி பேச்சை தொடங்கியவர். வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் கவிஞர் பாரதியாரின் பெயரில் இருக்கை அமைத்துள்ளார். பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோளைகாட்டி தமிழ்மொழியின் பெருமையை பரப்பி வருகிறார்.

மத்திய அரசின் சாதனை
தற்போதைய இளைஞர் சமூகம் இந்தியாவை ஆளும் சமூகமாக மாறுவார்கள். வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம். கொரோனா சவாலை கடந்து இந்தியா, பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். 200 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளோம். நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க மேக் இன் இந்தியா திட்டம் மூலம் தொழில்துறையில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. தமிழகத்தில் பாதுகாப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கனவு
75ஆவது சுதந்திர ஆண்டில் யோகா கலையை உலகம் முழுவதும் எடுத்து சென்றுள்ளோம். நாம் இந்தியனாக, தமிழனாக உலகையே ஆண்டு கொண்டுள்ளோம். 100வது சுதந்திர தின ஆண்டில் இந்தியா முன்னேறிய தேசமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது. உலக முழுவதுமாக விளையாட்டு போட்டிகளில் இளைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர். மாவட்டம் தோறும் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என்பது பிரதமரின் கனவு.

புதியக் கல்விக் கொள்கை
தாய் மொழியில் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக தான் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை முறையில் தான் தாய் மொழியில் நம்முடைய கருத்துகளை படிக்க முடியும். உலகையே முன்னேற்றும் கல்விக் கொள்கையாக இருக்கும். தாய் மொழி கல்வியை ஊக்குவிக்கதான் புதிய கல்விக் கொள்கை திட்டம் என்று தெரிவித்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications