Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3,800 கோடி ஏழையின் கதை! ரத்தன் டாடாவின் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்னது என்ன?

Subscribe to Oneindia Tamil

மும்பை: ரத்தன் டாடா வசித்த மும்பை வீட்டின் அருகில் வாழ்ந்து வந்த அண்டை வீட்டுக்காரர்கள் அவர் எந்தளவுக்கு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதைப் பற்றி சமூக வலைத்தள பக்கத்தில் மிக உருக்கமாக எழுதி வருகின்றனர்.

இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த 9 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் திடீரென்று காலமானார். அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கவேண்டும் என்று மகாராஷ்டிர மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது. வேறு எந்த இந்தியப் பணக்காரருக்கும் இல்லாத அளவு ஏழை எளிய மக்களைக்கூட இவரது மறைவு பாதித்துள்ளது.

ratan tata mumbai

இந்நிலையில்தான் மும்பையிலுள்ள கொலாபா ஏரியாவில் வசித்துவந்த ரத்தன் டாடாவின் அண்டை வீட்டுக்காரர்கள் அவரைப் பற்றிய நினைவுகளை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதன் மூலம் ரத்தன் டாடா எவ்வளவு எளிமையான வாழ்க்கையை நடத்திவந்தார், மனிதநேய மிக்கவராக எப்படி அவர் வாழ்ந்து வந்தார் என்பது பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.

எக்ஸ் தளத்தில் லோட்டஸ் என்பவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இவர் டாடாவின் பக்கத்து வீட்டில் வசித்துவந்தவர். அவர் தனது பதிவில், 'டாடா வெரி டவுன் டு எர்த் அண்ட் ஹம்பிள்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், "ரத்தன் டாடாவைப் பற்றி எனக்கு சில நல்ல நினைவுகள் இருக்கின்றன. பல ஆண்டுகள் முன்பு நான் கொலாபாவில் உள்ள பக்தவாரில் என் பக்கத்து வீட்டில் வசித்து வந்தார்.

அப்போது, ​​அவர் தினமும் மாலையில் அவர் சாதாரண டி ஷர்ட் அணிந்துகொண்டு மாலை நேரங்களில் 2 டாபர்மேன் நாய்களை அழைத்துக் கொண்டு வந்து வெளியே நடமாட வைப்பார். யுஎஸ் கிளப் டென்னிஸ் விளையாடி விட்டு டீ சாப்பிடுவார். அங்கே சாலைகளில் விளையாடும் சிறுவர்களிடம் அவர் அன்பாகப் பேசி அரட்டை அடிப்பார். ஒரு கருணையுள்ள துணிச்சலான மனிதர் அவர்.

ratan tata mumbai

மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளிடமும் குறிப்பாக நாய்களிடம் அன்பாக இருந்தார். தெரு நாய்கள் மீது அன்பு கொண்டவர். அவரால்தான் தெரு நாய்களை விரட்ட வேண்டாம் என்று தாஜ் ஹோட்டலில் உள்ள வாசல் காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவர் சமீபத்தில் மும்பையில் விலங்குகளுக்காக ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைக் கட்டினார். தனியாக வாழ்ந்துவரும் வயதானவர்களுக்காக ஒரு அற்புதமான சேவையைச் செய்து வந்தார். அவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லவும், அவர்களின் மளிகைப் பொருட்களை வாங்கவும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அவரது முன்னோர்கள் ஈரானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்து குஜராத்தின் கடற்கரையில் இறங்கினர். அவர்கள் குஜராத்தி கலாச்சாரத்தை மட்டுமல்ல, அந்த மொழி, உடைகளை ஏற்றுக்கொண்டனர். இன்று நாடு முழுவதும் அவருக்காக வருந்துகிறது. குறிப்பாக மும்பை நகரத்தில் ஒவ்வொரு மூலையிலும் ஏதோ ஒரு வடிவில் டாடா முத்திரையைப் பதிந்துள்ளது.

ரத்தன் சொத்து என்பது ஒரு நம்பராக மட்டுமே இருந்தது. ஏனெனில் அவரது தேவைகள் குறைவாகவே இருந்தன. அவர் எப்போதும் தான் ஒரு பாதுகாவலனாகவும், அவருடைய பணம் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நினைத்தார். அமைதியுடன் செல்லுங்கள் நண்பரே, நீங்கள் மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும்படியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தீர்கள். சோகமான இதயத்துடன் எனது அன்புக்குரிய மும்பையின் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவரிடமிருந்து நாங்கள் விடைபெறுகிறோம்" என்று எழுதியுள்ளார்.

மற்றொருவர் அபிஷேக் தேஷ்பாண்டே. இவரும் ரத்தன் டாடாவின் பக்கத்து வீட்டுக்காரர்தான். இவர் ரத்தன் டாடாவை தனது மாலை நடைப்பயிற்சியின் போது முதன்முதலாக சந்தித்ததை நினைவு கூர்ந்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "நான் மும்பையில் வளர்ந்தபோது ரத்தன் டாடாவை முதல்முறையாக சந்தித்தேன். அவர் கொலாபாவில் உள்ள யுனைடெட் சர்வீசஸ் கிளப்பில் தனது நாய்களுடன் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்தார். அவர் எந்தளவுக்கு இயல்பாக இருந்தார் என்பதை உணர்ந்தேன். நான் அவரைப் பார்த்ததும் அவருடன் கை குலுக்க விரும்பினேன். அவர், கைகுலுக்கி விட்டு என் பள்ளியைப் பற்றியும் படிப்பைப் பற்றியும் விசாரித்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு மும்பைக்காரரான டெபர்கா அம்புலி என்பவர் , "ரத்தன் டாடா தேசிய சின்னமாக ஒரு அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும், அவர் எளிமையாகவே நடந்துகொண்டார். கொலாபா அருகே காரில் இருந்து அவர் இறங்குவதைப் பார்த்திருக்கிறேன். எந்தவித பந்தோபஸ்தும் பாதுகாவலர்களும் இல்லாமல் இறங்கிச் செல்வார். இப்படி ஒரு தொழிலதிபரை முதன்முறையாக நான் பார்த்தேன். உதவியாளர்கள் இல்லை, பாதுகாவலர்கள் இல்லாமல் அவர் காரில் இருந்து இறங்கி ஒரு கட்டிடத்தைத் தேடினார். அவரே அந்த முகவரியைத் தேடிக் கண்டுபிடித்துச் சென்றார். இது ஒரு அதிசயமான தருணம்" என்று வியந்துள்ளார்.

ratan tata mumbai

இந்தியாவில் திடீர் பணக்காரர்களின் ஆட்டமே பெரிய அளவுக்குக் கேட்கிறது. தடபுடலான ஆடம்பர வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் உள்ள பலர் கடந்த இரண்டு தலைமுறைக்குள் இந்த இடத்தை எட்டிப் பிடித்தவர்கள். ஆனால், டாடா குடும்பம் இந்தியாவின் பாரம்பரிய மிக்கது. அதற்கு என்று தனி மரியாதை உள்ளது. வணிகத்தை அவர் சேவையோடு சேர்த்துப் பார்த்தார்.

பணத்தை அவர் ஏழை எளிய மக்களுக்குப் பயன்தரும் ஒரு பொருளாகப் பார்த்தார். அதிகம் சம்பாதிப்பதை விட அதிக அளவு தொழிலாளர்களை உருவாக்க வேண்டிய திட்டங்களை வகுத்தார். 3,800 கோடி சொத்து மதிப்புள்ள ஒருவர் இந்தளவுக்கு எளிமையாக வாழ்ந்தார் என்று சொன்னால் வருங்காலத்தில் யாரும் கொஞ்சம் நம்புவது கடினம்தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+