தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
மும்பை: 53 வயது உள் கட்டட வடிவமைப்பு நிபுணர் மற்றும் அவரது தாயார் ஆகியோர் 2018 ல் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அன்வாய் தனது தற்கொலைக் கடிதத்தில் தனது மரணத்துக்குக் காரணமாக ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பெயரைக் குறிப்பிட்டு இருந்தாக சொல்லப்படுகிறது.

இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கடந்த மே மாதம் மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை சந்தித்து தற்கொலை செய்து கொண்ட அன்வய் நாயக்கின் மகள் அதன்யா நாயக் எழுப்பிய புதிய புகாரின் அடிப்படையில் மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் நேற்று அதிகாலை வீடு புகுந்து அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கைது செய்தனர்.அவருடன் ஃபெரோஸ் ஷாயிக் மற்றும் நிதீஷ் சர்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள்.
அர்னாப் உள்ளிட்ட 3 பேரையும் அலிபக் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூன்று பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இராணி உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பத்திரிகை சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவால் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
