உ.பி. அகிலேஷ் ஓட்டை பிரிச்ச ஓவைசிக்கும் மாயாவதிக்கும் அந்த 2 விருதுகள் பார்சல்...சிவசேனா கிண்டல்
மும்பை: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கான வாக்குகளை பிரித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கும் மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசிக்கும் பாரத ரத்னா அல்லது பத்ம விபூஷண் விருதுகள் வழங்கலாம் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கிண்டலடித்துள்ளார்.
உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக அறுதிப்பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் காங்கிரஸ் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
உ.பி.யில் 2017 தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக 50க்கும் அதிகமான இடங்களை இழந்துள்ளது. ஆனால் சமாஜ்வாதி கட்சியோ 3 மடங்கு இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளது. இத்தேர்தலில் தலித்துகள் வாக்குகள் சமாஜ்வாதி கட்சிக்கு விழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக பக்கம் அந்த வாக்குகள் சாய்ந்தன. அதேபோல் 23 லட்சம் வாக்குகளை மஜ்லிஸ் கட்சியின் ஓவைசி 100 தொகுதிகளில் தனித்து போட்டி பிரித்தார். இதனால் பல தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியின் வெற்றி பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, முஸ்லிம்கள் சமாஜ்வாதி கட்சிக்கு ஓட்டுப் போட்டுவிட்டனர். எங்களுக்கு வாக்களித்திருந்தால் பாஜகவை தடுத்திருப்போம். நாங்கள் பாஜகவின் பி டீம் என திசைதிருப்பும் பிரசாரம் செய்தனர். அதேபோல் தலித் வாக்குகள் பாஜகவுக்கு விழுந்தது என்கின்றனர். தலித் வாக்குகள் எங்களிடம்தான் இருக்கிறது என்றார்.
இதனிடையே உ.பி. தேர்தல் முடிவுகள் தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது: உ.பி. தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் மாயாவதியும் ஓவைசியும்தான். ஆகையால் இந்த இருவருக்கும் பாரத் ரத்னா அல்லது பத்ம விபூஷண் விருது வழங்கலாம். இந்த தேர்தலில் 3 மடங்கு இடங்களை கூடுதலாக பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எங்களது பாராட்டுகள். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications