நம்பி வீட்டுக்குள்ள விட்டோம்! ஆனா அந்த ‘எக்ஸ்’ என்னை.. பரபரப்பு பாலியல் புகார் கொடுத்த பிரபல நடிகை.!
மும்பை : தனக்கு 17 வயது நடந்தபோது குடும்ப நண்பர் ஒருவர் உதவுவது போல் வீட்டுக்குள் நுழைந்து தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகை தான் எழுதிய புத்தகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் தொடங்கி பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட 'மீ டூ' மூலம் நடிகைகள் மற்றும் சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது அந்த விவகாரம் ஓரளவு குறைந்து இருக்கும் நிலையில் தான் சிறுவயதாக இருந்தபோது குடும்ப நண்பர் ஒருவரே தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்ததாக பிரபல பாலிவுட் நடிகை பரபரப்பு புகார் ஒன்றினை தெரிவித்துள்ளார்.

நடிகை குப்ரா சேட்
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட பிரபல பாலிவுட் நடிகையான குப்ரா சேட், பாலிவுட்டின் பிரபல நடிகர்களான சல்மான்கான் நடித்த ரெடி, சுல்தான், நடிகர் மாதவன் நடித்த ஜோடி பிரேக்கர்ஸ் ரன்வீர் சிங் நடித்த கல்லி பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஸ்கெர்ட் கேம்ஸ் உள்ளிட்ட பல வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் "ஓபன் புக் : நாட் எ மெமைர்" என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

பாலியல் தொல்லைகள்
அவர் அந்த புத்தகத்தில் தனக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து விரிவாக விளக்கி உள்ளதாகவும், தான் 17 வயதாக இருந்தபோதே குடும்ப நண்பர் ஒருவரால் தான் பாலியல் கொடுமைக்கு ஆளானது குறித்து பரபரப்பு புகார் கூறியுள்ளார். மாமா என்று தனது தாயாரால் அறிமுகப்படுத்தப்பட்ட மிஸ்டர் எக்ஸ் என அவரை உருவகப்படுத்தி உள்ள குப்ரா, பெங்களூருவில் பதினேழு வயதான போது தான் குடும்பத்துடன் தங்கி பொழுது அங்கு இருக்கும் ஒரு பிரபல ஹோட்டலுக்கு அடிக்கடி செல்வோம் எனவும் தனது தாய் மற்றும் சகோதரனுடன் அந்த உணவகத்தின் உரிமையாளர் ஒருவர் நெருக்கமாக பழகியாதகாக் கூறியுள்ளார்.

மாமா என்ற எக்ஸ்
தனது தாய் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்த போது அவர்களுக்கு உதவியாகவும் பின்னர் தன்னிடம் அவர் பாலியல் ரீதியாக தொல்லை தர தொடங்கியதாக கூறியுள்ளார். ஒருமுறை தனது குடும்பம் மிகப் பெரிய பொருளாதார சிக்கலில் இருந்த போது தனது தாய்க்கு உதவிய அவர், காரில் வீட்டுக்கு செல்லும்போது பின் இருக்கையில் இருந்த என் கால்களை தடவியதாகவும், அதிர்ச்சியில் நான் உறைந்து நின்ற போது அவர் அதனை மேலும் செய்ய தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.

கட்டிப்பிடித்து முத்தம்
இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்த போது, அவள் என்னை பார்த்து சிரித்தார். ஒரு பின்னர் அடிக்கடி தனது வீட்டிற்கு வர ஆரம்பித்தார் எனவும் தன்னை மாமா என்று கூறக்கூடாது என்று கேட்டுக் கொண்டார் எனக் கூறியிருந்தார். மேலும் தனது தாய் முன்னே என்னை கட்டி பிடித்து என் கன்னத்தில் முத்தமிட்டு இவர் தனக்கு மிகவும் பிடித்தவர் என அவர் சொன்னபோது தனது தாய் சிரித்ததாகவும் ஆனால் அது எனக்கு எரிச்சலாக இருந்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து இரண்டரை வருடங்கள் பாலியல் தொல்லையை அனுபவித்த பிறகு தான் வெளிநாடுகளுக்கு படிக்க சென்ற போது அவரிடம் இருந்து தப்பித்தேன்.

வெட்ககேடான ரகசியம்
பின்னர் பல வருடங்களுக்கு பிறகு இதுகுறித்து எனது தாயிடம் தான் சொன்ன போது அதற்காக தன்னிடம் மன்னிப்பு கேட்டார் என கூறியுள்ளார். மேலும் முதன்முதலாக தான் அவரது ஓட்டல் அறைக்குச் சென்றபோது தான் அருவருப்பாக செயல்பட்டதாகவும். தான் அப்போது கத்த முயற்சித்தும், ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ன நடக்கிறது என்றும், முடிவெடுப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. இது ஒரு மிகவும் வெட்கக்கேடான ஒரு ரகசியம் என கூறியுள்ளார். இந்த புத்தகம் தற்போது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் எழுப்பியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications