நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படை பாதுகாப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு மத்திய தொழிற் பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) முழு பாதுகாப்பை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த 15 ஆண்டுகளாக இந்த தலைமை அலுவலகத்திற்கு மாநில ரிசர்வ் போலீஸ் படையும், நாக்பூர் காவல்துறையும் பாதுகாப்பு வழங்கி வந்திருந்தது.
தற்போது இந்த இரண்டு படைகளின் பாதுகாப்புகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, இந்த பாதுகாப்பு பணியை தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளது.

தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
பாஜக உள்ளிட்ட பல வலதுசாரி கட்சிகளின் தாய் அமைப்பாக ஆர்எஸ்எஸ் கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 2006ல் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை தடுத்த காவல்துறையினர் அவர்களை அதே இடத்தில் சுட்டுக்கொன்றனர். அப்போதிலிருந்து ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு தேவை எனும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

15 ஆண்டுகளாக
முன்னதாக இந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத்துக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது அதன் தலைமை அலுவலகத்திற்கும் மத்திய தொழிற் பாதுகாப்புப்படையின் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஏற்கெனவே கடந்த 15 ஆண்டுகளாக இந்த தலைமை அலுவலகத்திற்கு மாநில ரிசர்வ் போலீஸ் படையும், நாக்பூர் காவல்துறையும் பாதுகாப்பு வழங்கி வந்திருந்தது.

24 மணிநேரமும்
தற்போது இந்த இரண்டு படைகளின் பாதுகாப்புகளும் விலக்கிக்கொள்ளப்பட்டு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, இந்த பாதுகாப்பு பணியை தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளது. இதன்படி சிஐஎஸ்எஃப்-ன் துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் தலைமையில் சுமார் 150 வீரர்கள் இந்த அலுவலகத்திற்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள். பாதுகாப்புப் படைவீரர்கள் தற்போது தலைமைச் செயலகத்திற்கு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீரர்கள் வாபஸ்
இவ்வாறு ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களிலிருந்து சுமார் 3,049 சிஐஎஸ்எஃப் வீரர்கள் விமான நிலைய பாதுகாப்பு பணியிலிருந்து திரும்ப பெறப்படுவதாக முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த வீரர்களுக்கு பதிலாக தனியார் நிறுவனத்தின் செகியூரிட்டி பணியாளர்கள் இந்த பணியினை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து சிஐஎஸ்எஃப் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், 3,049 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பணியாற்றிய பகுதிகள் அதிகம் பதற்றம் அற்ற பகுதிகள் எனவே அவர்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications