Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்யன் கானுக்கு கஞ்சா வாங்க ஏற்பாடு செய்தாரா அனன்யா பாண்டே? 2வது நாளாக நடிகையிடம் விசாரணை

Subscribe to Oneindia Tamil

மும்பை : போதை பொருள் வழக்கில் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்ட பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, போதை பொருள் தடுப்பு பிரிவில் இரண்டாவது நாளாக இன்றும் ஆஜரானார். விசாரணையின் போது அனன்யா பாண்டே தான் ஒருபோதும் போதை மருந்து உட்கொள்ளவில்லை, ஆர்யனுடனான வாட்ஸ் அப் சாட் ஜோக்குக்காக செய்யப்பட்டது என்றார்.

மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை பொருள் பார்ட்டி நடத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் அக்டோபர் 3ம் தேதி முன் கைது செய்யப்பட்டனர். மும்பையில் எம்ப்ரெஸ் என்ற சொகுசு கப்பலில் பார்ட்டி நடந்த போது செய்யப்பட்ட சோதனையில் போதை பொருட்கள் சிக்கியது.

போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இந்த கப்பலில் ரேவ் பார்ட்டி நடக்க போவதாக கிடைத்த தகவலை வைத்து இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. இந்த கப்பலில் ஆர்யன் கான் இருந்ததால் கைது செய்யப்பட்டார். பாலிவுட் சினிமா உலகிற்கு நெருக்கமான பலர், பிரபலங்கள் பலர் இந்த வழக்கில் சிக்கி உள்ளனர்.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

போதை பொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் மும்பை ஆர்த்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு இதுவரை இரண்டு முறை ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது. இவரின் ஜாமின் மனு மறுக்கப்பட முக்கியமான காரணம் ஆர்யன் கான் போனில் இருந்த வாட்ஸ் ஆப் உரையாடல்கள்தான். மும்பை சிறப்பு கோர்ட் இவருக்கு ஜாமின் மறுத்துள்ள நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இவரின் ஜாமின் மனு வரும் செவ்வாய் கிழமை விசாரிக்கப்பட உள்ளது.

போதை பொருள்

போதை பொருள்


ஆர்யன் கானிடம் இருந்து போதை பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றாலும் அவரின் நெருக்கிய நண்பரும், கப்பலில் அவருக்கு அருகில் இருந்தவருமான அர்பாஸ் என்ற நபர் ஒருவரிடம் இருந்து போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இவர்கள் இருவரும் வாட்ஸ் ஆப்பில் போதை பொருட்கள் குறித்து பேசிய ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நண்பர் போனில் உரையாடல்

நண்பர் போனில் உரையாடல்

அதோடு பல நபர்களிடம் ஆர்யன் கான் வாட்ஸ் ஆப் மூலம் போதை பொருள் குறித்து பேசி இருக்கிறார். போதை பொருள் விற்பனை, வாங்குவது என்று பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். அந்த குறிப்பிட்ட ரேவ் பார்ட்டி குறித்தும் அவர் உரையாடி உள்ளார். இதன் அடிப்படையில்தான் ஆர்யன் கானின் பெயில் மறுக்கப்பட்டது. அதே கப்பலில் இருந்த ஆர்யன்கான் நண்பர் ஒருவரின் போனில்தான் நடிகை அனன்யா பாண்டே போன் எண் இருந்துள்ளது. இவர்கள் வாட்ஸ் ஆப்பில் போதை பொருள் வாங்குவது குறித்து பேசியதாக தெரிகிறது.

Recommended Video

    Aryan Khan வழக்கில் பெறும் திருப்பம் நடிகை Ananya -வுக்கு சம்மன் | Shahrukh Khan
    மூன்று முறை சப்ளை

    மூன்று முறை சப்ளை

    இதன் அடிப்படையில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவுக்கு தற்போது போதை பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. இன்று அவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்த உள்ளது. கப்பலில் கைது செய்யப்பட்ட 19 பேரில் சிலருடன் இவர் வாட்ஸ் ஆப்பில் போதை பொருட்கள் குறித்தும், அதை வாங்குவது குறித்தும் அனன்யா பேசியதாக கூறப்படுகிறது. அதாவது , 2018-19 ஆம் ஆண்டில், அனன்யா பாண்டே ஆரியன் கானுக்கு போதை மருந்து விநியோகஸ்தர்களின் எண்களை வழங்கி மூன்று முறை மருந்துகளை வழங்க உதவியதாக வாட்ஸ் சாட் உரையாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அனன்யா பாண்டே மற்றும் ஆர்யன் கான் ஆகியோர் குழந்தை பருவ நண்பர்களாக என்பதால் நடிகர் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவின் கண்காணிப்பில் வந்துள்ளார். இதன் அடிப்படையில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவுக்கு தற்போது போதை பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. இன்று அவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்த உள்ளது. கப்பலில் கைது செய்யப்பட்ட 19 பேரில் சிலருடன் இவர் வாட்ஸ் ஆப்பில் போதை பொருட்கள் குறித்தும், அதை வாங்குவது குறித்தும் அனன்யா பேசியதாக கூறப்படுகிறது. அதாவது , 2018-19 ஆம் ஆண்டில், அனன்யா பாண்டே ஆரியன் கானுக்கு போதை மருந்து விநியோகஸ்தர்களின் எண்களை வழங்கி மூன்று முறை மருந்துகளை வழங்க உதவியதாக வாட்ஸ் சாட் உரையாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அனன்யா பாண்டே மற்றும் ஆர்யன் கான் ஆகியோர் குழந்தை பருவ நண்பர்களாக என்பதால் நடிகர் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவின் கண்காணிப்பில் வந்துள்ளார்.

    நெருங்கிய தோழி

    நெருங்கிய தோழி

    22 வயதாகும் அனன்யா பாண்டே . பிரபல நடிகர்கள் சுங்கி பாண்டே, பாவனா பாண்டே ஆகியோர் மகள் ஆவார் . தி ஸ்டுடன்ட் ஆப் தி இயர் 2 என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவின் பாலிவுட் படமான லிகர் படத்திலும் இவர் நடித்து வருகிறார். ஆர்யன் கான், அனன்யா பாண்டே இருவரும் நண்பர்கள் ஆவர். இரண்டு பேரும் சில பார்ட்டிகளில் ஒன்றாக கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆர்யன் கானின் சகோதரி சஹானா அனன்யா பாண்டேவின் நெருங்கிய தோழி ஆவார்.

    அனன்யா பாண்டே மறுப்பு

    அனன்யா பாண்டே மறுப்பு

    வாட்ஸ் ஆப் சாட்ஸ் அடிப்படையில் அனன்யா பாண்டே விசாரணை வலையில் சிக்கியதை அடுத்து நேற்று ஆஜராகி விளக்கம் அளித்த அனன்யா பாண்டே இன்றும் தேசிய போதைபொருள் தடுப்பு அதிகாரிகளிடம் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் ஆர்யன் கானுக்கு கஞ்சா சப்ளை செய்தீர்களா, கஞ்சா புகைத்தது உண்டா, போதைப்பொருள் சப்ளை செய்தது உண்டா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அனன்யா வாட்ஸ் அப் உரையாடலில் கஞ்சா சப்ளை தொடர்பான பேச்சுக்களை மறுத்தார் . தான் போதைப்பொருளை உட்கொண்டதும் அல்லது சப்ளை செய்யவில்லை என்று போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளிடம் மறுத்துள்ளார். மேலும் அனன்யா பாண்டே, ஆர்யன் கானுக்கு 'கஞ்சா' ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த வாட்ஸ்அப் அரட்டைகள் சும்மா ஜோக்கிற்காக சொன்னது என்றும் கூறியதாக ஆங்கில ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+