இந்தியா சமத்து பிள்ளையாக.. சொன்னதை கேட்கிறது.. சீண்டிய அமெரிக்க அதிபர் மாளிகை.. நிலைமை மோசமாகுது!
மும்பை: மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் மேகங்களுக்கு மத்தியில், உலக எரிசக்தி சந்தையில் ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தற்காலிகமாகத் தளர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
"இந்தியா ஒரு 'குட் ஆக்டர்' (சரியான முறையில் ஒத்துழைப்பவர்- நல்ல பிள்ளை). ஏற்கனவே எங்களது கோரிக்கையை ஏற்று ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை அவர்கள் நிறுத்தியிருந்தனர். அதன் அடிப்படையில் இந்த 30 நாள் தற்காலிக விலக்கு அளிக்கப்படுகிறது" என வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.

ஏன் இந்த திடீர் மனமாற்றம்?
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போரால், உலகெங்கிலும் கச்சா எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி (LNG) எரிவாயு விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, உலக எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் 'ஹார்முஸ் ஜலசந்தியை' ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணம்.
கடலில் தவித்துக் கொண்டிருக்கும் ரஷ்ய எண்ணெய் கப்பல்களை இந்தியா பெற்றுக்கொள்ள அனுமதிப்பதன் மூலம், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைச் சமாளிக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. "ஈரானால் ஏற்பட்டுள்ள இந்த இடைக்காலத் தட்டுப்பாட்டைச் சரிசெய்யவே இந்த முடிவு. இதனால் ரஷ்யாவுக்குப் பெரிய நிதி ஆதாயம் கிடைத்துவிடாது" என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
ட்ரம்பின் வியூகம் மற்றும் இந்தியாவின் பங்கு
அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் இதுகுறித்துக் கூறுகையில், "அதிபர் ட்ரம்பின் எரிசக்தி கொள்கையினால் அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி உச்சத்தைத் தொட்டுள்ளது. இருப்பினும், உலகச் சந்தையை நிலைப்படுத்த இந்தியா போன்ற அத்தியாவசியக் கூட்டாளிகளுக்கு இந்த விலக்கு அவசியம்" என்றார்.
மேலும், ரஷ்யாவிடமிருந்து விலகும் இந்தியா, வரும் காலங்களில் அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் என வாஷிங்டன் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
கடந்த வாரம் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதலில் சவூதி அரேபியாவின் 'அராம்கோ' சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஈராக்கின் 'ருமைலா' எண்ணெய் வயல்கள் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகின. இது எண்ணெய் உற்பத்தியைப் பெரும் அளவில் பாதித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், ஏற்கனவே அமெரிக்காவின் அழுத்தத்தால் ரஷ்ய எண்ணெயைக் குறைத்துக் கொண்டு, வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்த இந்தியாவுக்கு, இந்த 30 நாள் கால அவகாசம் ஒரு தற்காலிக நிம்மதியைத் தந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா பலவீனம்
சர்வதேச உறவுகளில் ஒரு இறையாண்மை கொண்ட நாடு, தனது எரிசக்தித் தேவைகளுக்காக மற்றொரு நாட்டிடம் 'அனுமதி' கோருவது போன்ற பிம்பம் உருவாவது ராஜதந்திர ரீதியாக ஒரு பலவீனமான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் ஒரு பொருளாதார வல்லரசு, தனது தேசிய நலன்களையும் எரிசக்தி பாதுகாப்பையும் (Energy Security) முன்னிறுத்தி முடிவெடுக்கும் தார்மீக உரிமையைக் கொண்டுள்ளது; இதில் வாஷிங்டன் போன்ற வெளிநாட்டு சக்திகளின் தலையீடு என்பது இந்தியாவின் 'தன்னாட்சி வெளியுறவுக் கொள்கைக்கு' (Strategic Autonomy) விடப்படும் சவாலாகும்.
அமெரிக்கா வழங்கும் இந்த 'தற்காலிக விலக்கு' என்பது ஒருபுறம் வர்த்தக ரீதியான சலுகையாகத் தெரிந்தாலும், மறுபுறம் இது இந்தியாவின் இறையாண்மையைக் கட்டுப்படுத்தும் ஒரு கருவியாகவே (Leverage) சர்வதேச அரசியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. ஒரு நாடு யாருடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்த நாட்டு மக்களிடமும் அரசாங்கத்திடமுமே இருக்க வேண்டுமே தவிர, அது உலகளாவிய ஒரு நாட்டின் மேலாதிக்கத்திற்கு (Hegemony) உட்பட்டு இருக்கக் கூடாது. இத்தகைய சூழல், எதிர்காலத்தில் இந்தியாவின் வெளியுறவு முடிவுகளில் மற்ற நாடுகளின் அழுத்தம் அதிகரிக்க வழிவகுப்பதோடு, இந்தியாவின் பிம்பத்திற்கும், அதன் சுதந்திரமான முடிவெடுக்கும் திறனுக்கும் பின்னடைவாக அமையக்கூடும் என்பதே கசப்பான உண்மையாகும்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான இந்த 'எண்ணெய் ராஜதந்திரம்' உலக அரசியலில் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கிச் செல்கிறது.
-
குறிவைத்து அடித்த ஈரான்.. பற்றி எரியும் இஸ்ரேல் கப்பல்.. ஹார்முஸ் நீரிணையில் புதிய பிரச்சனை! -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்காமல் நைசாக நழுவிய இந்திய கப்பல்.. புதிய ரூட்டை பிடித்து பயணம்! ஆஹா -
துபாய் Oracle அலுவலகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு!











Click it and Unblock the Notifications