மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அபிலாஷா பராக்! இந்திய ராணுவ முதல் பெண் போர் விமானியாக தேர்வு... சென்னையில் பயிற்சி பெற்று சாதனை

Google Oneindia Tamil News

மும்பை: சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அபிலாஷா பராக், இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் விமானியாக நேற்று பொறுப்பேற்றார்.

மராட்டிய மாநிலம் நாசிக்கில் போர் விமானிகள் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று நாசிக் போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் 36 பேர் பயிற்சி முடித்தனர்.

இவர்களுக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஏகேசூரி வழங்கினார்.

தைவானை சுற்றி சூழலும் சீன ராணுவ விமானங்கள்.. அமெரிக்காவுக்கு பொளேர் பதிலடி.. நடந்தது என்னதைவானை சுற்றி சூழலும் சீன ராணுவ விமானங்கள்.. அமெரிக்காவுக்கு பொளேர் பதிலடி.. நடந்தது என்ன

முதல் பெண் போர் விமானி

முதல் பெண் போர் விமானி

பயிற்சி முடித்து பதக்கம் பெற்ற நபர்களில் ஒரு பெண் அதிகாரியும் அடங்குவார். அவர் பெயர் கேப்டன் அபிலாஷா பராக். இதன்மூலம் இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி என்ற பெயரை கேப்டன் அபிலாஷா பராக் பெற்றுள்ளார். சிறுவயது முதலே ராணுவ பணியில் விருப்பம் கொண்ட நிலையில் அவர் தனது கனவை நனவாக்கி உள்ளார்.

ராணுவ குடும்பம்

ராணுவ குடும்பம்

அபிலாஷா பராக் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேர்ந்தார். இவரது தந்தை பெயர் ஓம்சிங். இவர் இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் கர்னலாக பதவி வகித்து ஓய்வு பெற்றுள்ளார். தந்தை ராணுவத்தில் சேவை செய்த நிலையில் ராணுவ பணி மீதான ஆசை அபிலாஷா பராக்கிற்கு ஏற்பட்டது. இந்த ஆசை தற்போது நிறைவேறி தந்தை வழியில் மகளான அபிலாஷா பராக்கும் ராணுவ சேவையில் இணைந்துள்ளார்.

பெண்களாலும் சாதிக்க முடியும்

பெண்களாலும் சாதிக்க முடியும்

இதுபற்றி அபிலாஷா பராக் கூறுகையில், ‛‛"ராணுவ குடும்பத்தில் வளர்ந்ததால் அந்த சீருடை மீது எனக்கு நாட்டம் இருந்தது. ராணுவத்தில் இருந்து 2011ல் என் தந்தை ஓய்வு பெற்றார். இதை வித்தியாசமாக உணர்ந்தேன். 2013ல் ராணுவ பயிற்சி மையத்தில் எனது அண்ணன் பயிற்சி முடித்தார். அந்த அணிவகுப்பை பார்த்தபோது ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற உணர்வு இன்னும் அதிகரித்தது. 2018 ல் சென்னை பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த பிறகு ராணுவ விமானப்படையை தேர்வு செய்தேன். ராணுவ விமானப்படையில் பெண்களால் சாதிக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. மேலும் இந்திய ராணுவம் பெண்களை போர் விமானிகளாக சேர்க்க தொடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்ந்தே நான் இதை செய்தேன். தற்போது அதில் வெற்றி பெற்றுள்ளேன்'' என்றார்.

சென்னையில் பயிற்சி

சென்னையில் பயிற்சி

இவர் சனாவரில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 2016ல் டெல்லியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பி டெக் பட்டப்படிப்பை முடித்தார். 2018ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். சென்னையிலுள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இருந்து இந்திய ராணுவத்தில் இணைந்தார். கார்ப்ஸ் ஆப் ஆர்மி ஏர் டிபென்ஸில் கன்டிஜென்ட் கமாண்டராக தேர்வானார். ராணுவ வான்விமானப்படை இளம் அதிகாரிக்கான ஏர் டிராபிக் மேனேஜ்மென்ட் மற்றும் ஏர் லாஸ் படிப்பில் 75.70 சதவீதத்துடன் 'ஏ' கிரேட் பெற்று முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.

English summary
Abilasha Barak, who trained at the Army Training Center in Chennai, became the first female fighter pilot in the Indian Army yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X