மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புரட்டி போட்ட அந்த ஓவர்! அதிர்ந்த டிரெஸ்ஸிங் ரூம்! ஜெயிக்க வேண்டிய மேட்சில்.. சிஎஸ்கே தோற்றது எப்படி

Google Oneindia Tamil News

மும்பை: நேற்று பஞ்சாப்பிற்கு எதிராக வெற்றிபெற வேண்டிய போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. சிஎஸ்கே ரசிகர்களை இந்த தோல்வி கலங்க வைத்துள்ளது.

2022 ஐபிஎல் சீசன் மும்பை, சென்னை அணிகளுக்கு சரியாக அமையவில்லை. மும்பை அணி வரிசையாக 8 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது.

அதே சமயம் சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது.

யார் கொடுத்த அட்வைஸ் அது? சிஎஸ்கே செய்த பெரிய தப்பு.. இப்போ பாருங்க விடாமல் துரத்துகிறது.. பரிதாபம்!யார் கொடுத்த அட்வைஸ் அது? சிஎஸ்கே செய்த பெரிய தப்பு.. இப்போ பாருங்க விடாமல் துரத்துகிறது.. பரிதாபம்!

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

நேற்று சிஎஸ்கே டாஸ் வென்ற நிலையில், பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இந்த முறை பஞ்சாப் அணி தொடக்கத்திலேயே மயங்க் அகர்வால் விக்கெட்டை இழந்தது. வெறும் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் அவுட்டானார். ஆனால் அதன்பின் சிஎஸ்கே அணியால் பஞ்சாப் அணியின் விக்கெட்டை பெரிதாக எடுக்க முடியவில்லை. எந்த அணியில் இருந்தாலும் சிஎஸ்கேவிற்கு எதிராக தவான் சிறப்பாக ஆடுவார்.

தவான் பேட்டிங்

தவான் பேட்டிங்

அதேபோல் நேற்று மேட்சிலும் 59 பந்தில் 88 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸ், 9 பவுண்டரி அடக்கம். இன்னொரு பக்கம் இளம் வீரர் ராஜபக்சே மிகவும் சிறப்பாக ஆடினார். வெறும் 32 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி அடக்கம். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனாலும் தவான் மட்டும் அதிரடியாக ஆடி வந்தார். இதனால் பஞ்சாப் அணி 187-4 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

அதன்பின் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தது. உத்தப்பா வெறும் 1 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.இன்னொரு பக்கம் ருத்துராஜ் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின் சான்டனர் 9, ஷிவம் தூபே 8 ரன்கள் எடுத்தனர். இதனால் சிஎஸ்கே அணி கடுமையாக திணறிக்கொண்டு இருந்த நிலையில் அம்பதி ராயுடு மட்டும் சிஎஸ்கே அணியில் நிதானமாக ஆடிக்கொண்டு இருந்தார்.

நிதானம்

நிதானம்

தொடக்கத்தில் நிதானம் காட்டிய அம்பதி ராயுடு அதன்பின் அதிரடியாக ஆடினார். 39 பந்தில் 6 சிக்ஸ், 7 பவுண்டரி என்று மொத்தம் 78 ரன்கள் எடுத்தார். ராயுடுவும் அவுட்டான பின்தான் சிஎஸ்கே வசம் இருந்த மேட்ச் கைவிட்டு போனது.ஜடேஜா , தோனி இருவரும் எப்படியாவது மேட்சை முடிக்க வேண்டும் என்று முயன்று கொண்டு இருந்தனர். சிஎஸ்கே அணி 18 ஓவரில் 153-5 ரன்கள் எடுத்து இருந்தது. வெற்றிபெற 35 ரன்கள் தேவைப்பட்டது. 2 ஓவரில் 35 ரன்கள் எடுப்பது எளிதுதான்.

19வது ஓவர்

19வது ஓவர்

ஆனால் 19வது ஓவரில் தோனி, ஜடேஜா இருவரும் பெரிதாக ஷாட் அடிக்க முடியாமல் திணறினார்கள். அர்ஷ்தீப் சிங் வீசிய ஓவரை அடிக்க முடியாமல் இரண்டு ஜாம்பவான் வீரர்களும் திணறினார்கள். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே சென்றது. மொத்தமாக அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இந்த ஓவரிலேயே சிஎஸ்கே கையைவிட்டு ஆட்டம் சென்றுவிட்டது. இந்த ஓவரிலேயே சிஎஸ்கே பெவிலியன், ட்ரெஸ்ஸிங் ரூம் சோகமாக காணப்பட்டது.

Recommended Video

    PBKS vs CSK: Punjab Kings beat CSK by 11 runs, 6th loss for defending champions | Oneindia Tamil
    ஆட்டம் முடிந்தது

    ஆட்டம் முடிந்தது

    கடைசி ஓவரில் 27 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தது குறைந்தது 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியாவது இதில் அடிக்க வேண்டும். முதல் பந்திலேயே தோனி சிக்ஸ் அடிக்க.. மூன்றாவது பந்தில் ரிஷி தவான் ஓவரில் தோனி அவுட் ஆனார். கடைசி ஓவரில் 5வது பந்தில் ஜடேஜா மீண்டும் சிக்ஸ் அடிக்க.. அந்த ஓவரில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து சிஎஸ்கே அணி 176/6 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    English summary
    IPL 2022: How CSK lost the match against Punjab with less margin? நேற்று பஞ்சாப்பிற்கு எதிராக வெற்றிபெற வேண்டிய போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X