Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏன் இந்த ஆணவம்? கேப்டன் பதவி வந்ததும்.. இப்படி செய்வது சரியா மிஸ்டர் ஹர்திக் பாண்டியா? நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

மும்பை: 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ஹர்திக் பாண்டியா நடந்து கொள்ளும் விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

2022 ஐபிஎல் தொடர் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசனில் டாப் இரண்டு அணிகளான சிஎஸ்கே, மும்பை இரண்டும் வரிசையாக 4 போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமாக சொதப்பி உள்ளது.

இரண்டு அணிகளும் இந்த முறை ப்ளே ஆப் செல்வது கஷ்டமாகி உள்ள நிலையில்தான்.. குஜராத், ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற அணிகள் இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருகிறது.

 குஜராத்

குஜராத்

முக்கியமாக குஜராத் அணி நேற்று நடந்த போட்டிக்கு முன்பு வரை ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் சிறப்பாக ஆடி வந்தது. வரிசையாக 3 போட்டிகளில் குஜராத் அணி வென்று முன்னிலையில் இருந்தது. நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி முதல்முறையாக தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி 162/7 ரன்கள் எடுத்தது.

குஜராத் தோல்வி

குஜராத் தோல்வி

அதன்பின் ஆடிய ஹைதராபாத் அணி 19.1 ஓவரில் 168/2 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த போட்டியிலும் சரி.. இதற்கு முன்பாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் சரி.. ஹர்திக் பாண்டியா கேப்டனாக நடந்து கொண்ட விதம் கடுமையாக விமர்சனங்களை சந்தித்தது. பஞ்சாப் அணிக்கு எதிராக போட்டியில் கடைசி ஓவரில் கடைசி இரண்டு பாலில் அடுத்தடுத்து சிக்ஸ் அடித்து திவாத்தியா குஜராத் அணியை வைத்தார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த போட்டியில் ரன் அவுட் ஆன போது மில்லரை ஹர்திக் பாண்டியா கடுமையாக திட்டினார். கிரீஸில் மில்லரை நிற்க சொல்லிவிட்டு பாண்டியா ஓடி வந்தார். ஆனால் மில்லர் ஸ்டிரைக்கர் எண்டில் நிற்காமல் திடீரென ஓட தொடங்கினார். இதனால் ஹர்திக் பாண்டியா ரன் அவுட் ஆவார். இதையடுத்து களத்திலேயே மோசமாக மில்லரை திட்டிவிட்டு பாண்டியா பெவிலியன் சென்றார். அதன்பின் பெவிலியனிலும் பாண்டியா இதை பற்றி கடுமையாக பேசிக்கொண்டு இருந்தார்.

மீண்டும் கோபம்

மீண்டும் கோபம்

இது போக நேற்று நடந்த போட்டியிலும் ஹர்திக் பாண்டியா இதேபோல் முகமது ஷமியை கடுமையாக திட்டினார். முகமது ஷமி தேர்ட் மேனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் ஒரு பந்து சென்றது. இது கேட்ச் கிடையாது. ஷமி ஓடி வந்து பிடிக்க முயன்று இருந்தால் அது பவுண்டரி சென்று இருக்கும். இதனால் பந்தை பிடிக்க முயற்சி செய்யாமல் ஷமி அங்கேயே நின்று பந்தை தடுத்தார். இதை பார்த்ததும் பாண்டியா கோபம் ஆனார்.

 கோபம்

கோபம்

ஏன் பந்தை பிடிக்கவில்லை என்று பாண்டியா கடுமையாக கோபமாக கேள்வி எழுப்பினார். பல வருட அனுபவம் கொண்ட சீனியர் வீரர் ஷமி. ஆனால் அவரை பாண்டியா மிக மோசமாக நேற்று நடத்தினார். கேப்டன் பதவி வந்ததும் ஹர்திக் பாண்டியா இப்படி நடந்து கொள்வது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. முன்னாள் கேப்டன் தோனி சக வீரர்களை இப்படி களத்தில் அசிங்கப்படுத்தியது இல்லை. ஏன் எப்போதும் கோபமாக இருக்கும் கம்பீர் கூட ஐபிஎல்லில் சக வீரர்களை இப்படி திட்டியது இல்லை.

Recommended Video

    SRH vs GT: Hardik Pandyas half-century powers Gujarat Titans to 162/7 against SRH
    கோலி

    கோலி

    மற்ற அணி வீரர்கள் மீது கடுமையாக கோபம் அடையும் கோலி கூட கேப்டனாக இருந்த சமயத்தில் ஒரே அணி வீரர்களை இப்படி எல்லாம் திட்டியது கிடையாது. ஆனால் ஹர்திக் பாண்டியா தனது முதல் கேப்டன்சி தொடரிலேயே இப்படி நடந்து கொள்வது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஏன் உங்களுக்கு இந்த ஆணவம்.. கேப்டன் பதவி வந்ததும் ஏன் இப்படி திமிராக நடந்து கொள்கிறீர்கள் மிஸ்டர் ஹர்திக் பாண்டியா என்று நெட்டிசன்கள் பலர் அவரை விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+