மசூதிகளில் தடை? மைக்ல பெட்ரோல் விலைய பேசுங்க! பாஜக, சித்தப்பாவுக்கு பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே!
மும்பை : மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று மிரட்டிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு பதிலளித்துள்ள மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்யா தாக்கரே, மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்குப் பதிலாக, பணவீக்கம் அதிகரிப்பதைப் பற்றிப் பேச வேண்டும் என கூறியுள்ளார்.
மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே கூறியதில் இருந்து மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
மே 3 ஆம் தேதிக்குள் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் எம்என்எஸ் தொண்டர்கள் மசூதிகளுக்கு வெளியே ஸ்பீக்கர்களை நிறுவி ஹனுமான் சாலிசாவை பாடுவார்க்ள் என்றும் ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

ராஜ் தாக்கரே எச்சரிக்கை
ராஜ் தாக்கரே இந்த பிரச்சினையை ஒரு சமூகப் பிரச்சினை என்று குறிப்பிட்டதோடு, இந்த விஷயத்தில் தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் கூறினார், அதே நேரத்தில் "நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள்" என்று சிவசேனா அரசாங்கத்திற்கு சவால் விடுத்தார். "மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை மே 3ஆம் தேதிக்குள் மூட வேண்டும், இல்லையெனில் ஹனுமான் சாலிசாவை ஸ்பீக்கர்களில் இசைப்போம்.

இது சமூகப் பிரச்சினை
இது சமூகப் பிரச்சினை, மதப் பிரச்சினை அல்ல. மாநில அரசிடம் நான் சொல்ல விரும்புகிறேன், இந்த விஷயத்தில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள்," என்றும் அவர் பேசினார். மேலும், மும்பையில் உள்ள முஸ்லீம் பகுதிகளில் உள்ள மசூதிகளில் சோதனை நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜ் தாக்கரே வேண்டுகோள் விடுத்தார், மேலும் அங்கு வசிக்கும் மக்கள் "பாகிஸ்தான் ஆதரவாளர்கள்" என்றும் கூறினார்.

மதராசா ஒலிப்பெருக்கி
"முஸ்லீம் குடிசைகளில் உள்ள மதராசாக்களை ரெய்டு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இந்த குடிசைகளில் வசிக்கின்றனர். அங்கு என்ன நடக்கிறது என்பது மும்பை போலீசாருக்கு தெரியும்... எங்கள் எம்எல்ஏக்கள் அவர்களை வாக்கு வங்கிக்காக பயன்படுத்துகிறார்கள், அத்தகையவர்களுக்கு ஆதார் அட்டை கூட இல்லை. , ஆனால் எம்எல்ஏக்கள் அவற்றை உருவாக்குகிறார்கள்," என்று அவர் கூறினார்.

ஆதித்யா தாக்கரே பதிலடி
இந்நிலையில் ராஜ் தாக்கரேவுக்கு அவரது உறவினரும் மகாராஷ்டிர அமைச்சருமான ஆதித்யா தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார். ராஜ் தாக்கரேவின் எச்சரிக்கை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர், "பரவாயில்லை, ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்குப் பதிலாக, பணவீக்கம் அதிகரிப்பதைப் பற்றிப் பேச வேண்டும். பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலைகளைப் பற்றிப் பேச வேண்டும். மேலும் 60ஐத் திரும்பிப் பார்க்காமல் கடந்த இரண்டு மூன்று வருடங்களில் என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேசுவோம்." என பதிலடி கொடுத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications