மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

24 மணி நேரம் கூட இல்லை.. என்ன செய்வார் அமித் ஷா? மகாராஷ்டிரா அரசியலில் திக் திக் நிமிடங்கள்!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இன்னும் 24 மணி நேரம் கூட இல்லாத நிலையில், பாஜக எப்படி பெரும்பான்மை பெறும் என்று கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இன்னும் 24 மணி நேரம் கூட இல்லாத நிலையில், பாஜக எப்படி பெரும்பான்மை பெறும் என்று கேள்வி எழுந்துள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா முதல்வர் பதவி வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறது. இதனால் அங்கு பாஜக இன்னும் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.

அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது.

இரண்டு வாரம்

இரண்டு வாரம்

இந்த நிலையில்தான் இரண்டு வாரங்களுக்கு பின் மஹாராஷ்டிராவில் முதல்வர் பட்னாவிஸ் பதவி விலகினார். கடந்த 9ம் தேதியோடு அவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 8ம் தேதியே அவர் பதவி விலகினார். இதனால் பட்னாவிஸ் தற்போது அங்கு ஆட்சி பொறுப்புகளை மட்டும் ஆளுனரின் கோரிக்கையில் பெயரில் கவனித்து வருகிறார்.

ஆட்சிக்கு அழைத்தார்

ஆட்சிக்கு அழைத்தார்

அம்மாநில ஆளுநர் பகத் சிங் பாஜக கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து இருக்கிறார். பாஜக தனிப்பெரும் கட்சியை என்ற காரணத்தால் அந்த கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளை பாஜக எப்படியாவது ஆட்சி அமைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி ருக்கிறது.

நான்கு

நான்கு

ஆனால் பாஜக எப்படி ஆட்சி அமைக்கும், எப்படி பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று பெரும் கேள்வி எழுந்துள்ளது. இதற்காக நான்கு வாய்ப்புகளை பாஜக பயன்படுத்த போகிறது என்று கூறுகிறார்கள். அதன்படி நாளைக்குள் எப்படியாவது சிவசேனாவை சமாதானம் செய்யலாம் என்று பாஜக திட்டமிடுகிறது. ஆனால் இது மிகவும் கஷ்டமான விஷயம் என்கிறார்கள்.

இரண்டாவது திட்டம்

இரண்டாவது திட்டம்

சிவசேனா முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறது. அதனால் இந்த முதல் திட்டம் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்கிறார்கள். இன்னொரு பக்கம் இரண்டாவது பாஜக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சமாதானமாக போக, புதிய கூட்டணியை வைக்க பேசி வருகிறது. இதுவும் நடப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

மூன்றாவது திட்டம்

மூன்றாவது திட்டம்

பாஜக வைத்திருக்கும் இன்னொரு திட்டம் கொஞ்சம் உதவ வாய்ப்புள்ளது. அதன்படி நாளை ஆட்சி அமைத்துவிட்டு, ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு அல்லது மூன்று நாள் அவகாசம் கேட்கலாம். அதற்குள் சிவசேனா கட்சியுடன் பாஜக எப்படியாவது உடன்படிக்கையை மேற்கொள்ளலாம் என்று திட்டமிட்டு வருகிறது. இதற்காக அமித் ஷாவே வந்து பேச கூட வாய்ப்புள்ளது.

இறங்கி போகும்

இறங்கி போகும்

4வது திட்டமாக பாஜக சிவசேனாவிற்கு 5 வருடத்தில் கடைசி இரண்டரை வருடம் முதல்வர் பதவி தருவதாக ஒப்புக்கொண்டு ஆட்சி அமைக்கலாம் என்கிறார்கள். இரண்டரை வருடத்தில் என்ன வேண்டுமானாலும் அரசியலில் நடக்கும். அதனால் பாஜக இப்போது விட்டுக்கொடுப்பது போல கொடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

24 மணி நேரம்

24 மணி நேரம்

பாஜக மகாராஷ்டிரராவில் ஆட்சி அமைக்க இன்னும் 24 மணி நேரம் கூட முழுதாக இல்லை. அதனால் மகாராஷ்டிரா அரசியலில் ஒவ்வொரு நிமிடமும் திக் திக் என்று சென்று கொண்டு இருக்கிறது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் ஒவ்வொரு அடியும் இதனால் கவனம் பெறுகிறது.

English summary
Maharashtra: Not even 24 hours, What BJP will do to get a majority to form the government amid crisis?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X