கொஞ்சம் சீசன் மாறட்டும்.. புது நறுமணத்துடன் திரும்ப வருவேன்.. பட்னவிஸ் மனைவி

பட்னவிஸ் மனைவி அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: "புத்துணர்ச்சியுடன், புது நறுமணத்துடன் மீண்டும் வருவேன்.. கொஞ்சம் சீசன் மாறட்டும்.. அனைவருக்கும் நன்றி" என்று கூறி டிவீட் போட்டுள்ளார் மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து விடை பெறும் தேவேந்திர பட்னவீஸின் மனைவி அம்ருதா.

மகாராஷ்டிராவை கடந்த ஐந்து வருடங்களாக கட்டியாண்டு வந்த பட்னவீஸ் மீண்டும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி புரிவார் என்ற பொதுவான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் செய்த அதிரடி அரசியலால் இந்த ஆசையில் மண் விழுந்து விட்டது.

 maharashtra political twist: fadnavis wife tweet

2வது முறையாக முதல்வர் பதவியை ஏற்று ஓரிரு நாட்களிலேயே பதவியிலிருந்து விலக நேரிட்டது பட்னவீஸுக்கு. இந்த நிலையில் பட்னவீஸின் மனைவி அம்ருதா ஒரு டிவீட் போட்டுள்ளார்.

உருது மொழி வாசகத்தை மேற்கோள் காட்டி அந்த டிவீட்டை அவர் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "நான் மீண்டும் வருவேன்.. புது நறுமணத்துடன், புத்துணர்ச்சியுடன்.. இந்த சீசன் கொஞ்சம் மாறட்டும்" என்று அவர் உருது வாசகத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.

தொடர்ந்து அவர் எழுதுகையில், "கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்களது அண்ணியாக என்னை ஏற்றுக் கொண்ட மகாராஷ்டிராவுக்கு நன்றி. நீங்கள் என் மீது பொழிந்த அத்தனை அன்பும் என்னால் மறக்க முடியாதது. என்னால் முடிந்த அளவுக்கு நான் சிறப்பாக சேவையாற்றினேன். ஒரு மாறுபட்ட நேர்மறையான மாற்றத்தை உருவாக்க நான் உழைத்தேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

அம்ருதா ஒரு வங்கிப் பணியாளர் ஆவார். தனது கணவர் முதல்வரான பிறகு அவரது பல்வேறு செயல்பாடுகளுக்கு உறுதுணையாக விளங்கியவர். அவரை அனைவரும் பாசத்துடன் வாஹினி (மராத்தியில் அண்ணி) என்றுதான் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+