மகாராஷ்டிராவில் பேரழிவு.... ஒரே நாளில் 985 பேரை காவு கொண்டது கொடூர கொரோனா!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவின் பேரழிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தில் புதன்கிழமையன்று மட்டும் மொத்தம் 985 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் கொரோனா பேரழிவு ருத்ரதாண்டவமாடுகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு மிக மிக மோசமான அழிவை உருவாக்கி வருகிறது.

Maharashtra records 985 Covid deaths in Single day

மகாராஷ்டிராவில் புதன்கிழமையன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 63,309 ஆக இருந்தது. இம்மாநிலத்தில் இதுவரை இல்லாத உச்ச பாதிப்பு இது.

அதேபோல் நேற்று ஒரே நாளில் 985 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற- அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 6,73,481 ஆகும்.

நாக்பூரில் நேற்று 7,503 பேருக்கு கொரோனா உறுதியானது. இங்கு மொத்தம் 102 பேரை கொரோனா காவு கொண்டது. மும்பையில் புதன்கிழமையன்று 4,966 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மும்பையில் நேற்று மட்டும் 78 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

மகாராஷ்டிராவில் 18 வயது முதல் 44 வயது வரையிலான அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+