லெப்ட்... ரைட்... சல்யூல்ட் - 'மார்ச் பாஸ்ட்' டான்ஸ் பார்த்து ரசிக்க - கலக்கல் வீடியோ

லெப்ட் ரைட் மார்ச் பாஸ்ட் டான்ஸ் பார்த்து ரசிங்க இணைய தளமே சிரிப்பலையில் மூழ்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: கிராமத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் அடிக்கும் மேளத்திற்கு ஏற்ப ஒருவர் வித்தியாசமாக மார்ச் பாஸ்ட் செய்து நடனமாடியது சிரிப்பலையை உருவாக்கியுள்ளது. அவரது வித்தியாசமான நடனம் சிரிக்காத சிடுமூஞ்சி நபர்களையும் சிரிக்க வைத்து விட்டது.

Recommended Video

    கிராமத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் அடிக்கும் மேளத்திற்கு ஏற்ப ஒருவர் வித்தியாசமாக மார்ச் பாஸ்ட்

    சாதாரணமாகவே நம் நாட்டில் எந்த விழா என்றாலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த நடனமாடுவார்கள். திருமண விழாவோ, இறுதிச்சடங்கு ஊர்வலமோ அடிக்கும் மேளத்திற்கு ஏற்ப ஆட்டம் பாட்டம் என்று அமர்களப்படும்.

    உற்சாகம் அதிகரித்தால் மேள சத்தத்திற்கு ஏற்ப கால்கள் தானாகவே நடனமாடும். போதை ஆசாமிகளுக்கு கேட்கவே வேண்டாம் தள்ளாடுவது போலவே நடனம் இருக்கும். இங்கே ஒருவர் ஆடிய வித்தியாசமான நடனம் சில நாட்களாக சமூக வலைத்தளங்களை சிரிப்பலையில் மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது.

    நடனங்கள்

    நடனங்கள்

    இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான நடனம் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு பரத நாட்டியம், கேராளாவிற்கு கதக்களி, என பல நடனங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நடனமும் ஒவ்வொரு விஷயத்தை பறைசாற்றும், அது அந்த மண் மற்றும் வாழ்க்கையை வெளிப்படுத்தும்.

    மார்ச் பாஸ்ட் நடனம்

    மார்ச் பாஸ்ட் நடனம்

    ட்விட்டரில் ஐபிஎஸ் அதிகாரியான திபன்ஷூ காப்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஒரு திருவிழாவில் ட்ரம்ஸ் மேளம் அடித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கிருந்த ஒருவர் அந்த மேளத்திற்கு வித்தியாசமான நடனம் ஒன்றை ஆடினார். இந்த வீடியோவில் அவர் மார்ச் பாஸ்ட் செய்வது போல நடனமாடியுள்ளார்.

    லெப்ட்... ரைட்...

    லெப்ட்... ரைட்...

    முன்னும் பின்னும் நடந்து சல்யூட் அடிக்கிறார்... லெப்ட்... ரைட் போடுகிறார்.. அப்புறம் அங்கும் இங்குமாக நடந்து கைகளை சுற்றி ஆடுகிறார். அவரது ஆட்டத்திற்கு கைத்தட்டல் அள்ளுகிறது. அவர் மது போதையில் நடனம் ஆடுவது போல தெரிகிறது. மிலிட்டரி சரக்கு அடித்திருப்பாரோ என்று பலரும் கமெண்ட் அடிக்கின்றனர்.

    சமூக வலைத்தளத்தில் சிரிப்பலை

    சமூக வலைத்தளத்தில் சிரிப்பலை

    அதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். புது விதமான இந்த நடனம் பலரை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை பலர் பகிர்ந்து கிண்டலான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    நடனம் எப்படி

    நடனம் எப்படி

    திருமண விழாவில் ஒருவரின் நடனம் பலரையும் மகிழ்ச்சிப்படுத்தும். இவரது நடனம் வித்தியாசமாக இருக்கவே பலரையும் கவர்ந்துள்ளது. பலர் இந்த வீடியோ குறித்து கருத்துக்களை தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர். இந்த நடனம் எப்படி உள்ளது நீங்களும் உங்கள் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+