ஒரு சிட்டிங்கிற்கு ரூ.21 லட்சம்! ஆர்யன் கானுக்கு ஆஜராகும் காஸ்ட்லி வழக்கறிஞர்! யார் இந்த ரோஹத்கி?
மும்பை : மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்று போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆர்யன் கானுக்கு ஆதரவாக இந்தியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி இன்று வாதாட உள்ளார். இந்தியாவின் காஸ்ட்லி வழக்கறிஞர்களில் ஒருவரான இவரை பற்றி இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் முதல் 10 சிறந்த வழக்கறிஞர்களின் பட்டியலில் முகுல் ரோஹத்கி உள்ளார். இவர் டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஸ்வத் பகாரி ரோஹத்கியின் மகன் ஆவார். மும்பை அரசு கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்த முகுல், இந்தியாவின் 36வது தலைமை நீதிபதியான யோகேஷ் குமார் சபர்வாலிடம் உதவியாளராக சேர்ந்து வழக்கறிஞர் பயிற்சியை ஆரம்பித்தார்.
மும்பை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடிய முகுல் ரோஹத்கி, மும்பை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக 1993ம் ஆண்டு பதவி உயர்வு பெற்றார். இவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி உள்ளார்.

முகேஷ் அம்பானி
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரான முகுர் ரோஹத்கி 2002 குஜராத் கலவரம் மற்றும் பெஸ்ட் பேக்கரி மற்றும் ஜாகீரா ஷேக் வழக்குகள் உட்படப் போலி என்கவுண்டர் மரண வழக்குகளில் குஜராத் அரசின் சார்பாக வாதாடினார். முகேஷ் அம்பானியுடன் எரிவாயு விவகாரம் தொடர்பாக அனில் அம்பானிக்கு அவர் வாதாடினார்.

மூன்று வருடம்
முகுல் ரோஹத்கி, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவின் 14வது அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக கடந்த 2014 ஜூன் மாதம் முதல் 2017 ஜூன் மாதம் வரை மூன்று ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். அதன்பிறகு அந்த பொறுப்பில் கேரளாவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான கேகே வேணுகோபால் நியமிக்கப்பட்டார்,.

தலைநகர் வழக்கு
ஆந்திர மாநில தலைநகர் விவகாரத்தில் அரசு சார்பில் வாதிட மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான முகுல் ரோஹத்கியை ஆந்திர அரசு நியமித்தது. இதற்காக ஐந்து கோடியை ஒதுக்கியுள்ள அம்மாநில அரசு, அவருக்கு ரூ.1 கோடியை முன்பணமாகவும் கொடுத்து வாதாட வைத்தது.

மகாராஷ்டிரா அரசு
இதேபோல் குஜராத்தில் நடந்த, சொராபுதீன், 'என்கவுன்டர்' தொடர்பான வழக்கின் விசாரணை, மும்பை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதை, விசாரித்து வந்த, நீதிபதி, லோயா, 2014ல், மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கில் மஹராஷ்டிரா அரசு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜரானார். அவருக்கு அரசு சார்பில் ரூ. 1.21 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது.

ஆஜராகும் முகுல் ரோஹத்கி
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கடந்த அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில் தமிழக அரசு சார்பில் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார். இதேபோல் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடி வருகிறார். தற்போது ஆர்யன்கான் வழக்கில் இன்று ஆஜராகுகிறார். ஆர்யனுக்கான ஜாமீன் விசாரணை இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் வருகிறது. இந்த வழக்கில் வாதாடுவதற்காக ரோஹத்கி திங்கள்கிழமை இரவு மும்பைக்கு வந்தார்.

காஸ்ட்லி வழக்கறிஞர்
இவர் ஒரு சிட்டிங்கிற்கு 10 லட்சம் முதல் 21 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார். இவர் ஆண்டு வருமானம் 10 கோடியாகும். இந்தியாவின் காஸ்ட்லியான வழக்கறிஞர்களில் ஒருவரான முகுல் ரோஹத்கி தனது திறமையான வாதம் மூலம் வழக்கின் போக்கை மாற்றக்கூடியவர். சட்ட நுணுக்கங்களை கரைத்துகுடித்த இவர்,. ஆர்யன் கானை வழக்கில் இருந்து மீட்டுவருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications