டிராபிக்கில் சிக்கிய வாகனங்கள்! மொத்த சுங்க கட்டணத்தையும் திரும்ப தர உத்தரவு! ரீபண்ட் பெறுவது எப்படி
மும்பை: மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாபெரும் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. 33 மணி நேரம் நீடித்த இந்த டிராபிக் ஜாமில் பல ஆயிரம் வாகனங்கள் சிக்கியிருந்தது. சமீப காலங்களில் ஏற்பட்ட மிக மோசான டிராபிக் ஜாம்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதற்கிடையே இந்த நெரிசலின்போது அங்குச் சிக்கிய அனைத்து வாகனங்களுக்கும் அப்போது வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணம் திரும்பத் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் பயணிக்கும் கார்கள், லாரிகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். இருப்பினும், சாலைகள் சரியாக இல்லாத போதும், டிராபிக்கால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்போதும் கூட சுங்கக் கட்டணம் வசூலிப்பது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலை
இதற்கிடையே மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகன ஓட்டிகளுக்கு ரூ.5.16 கோடி சுங்கக் கட்டணம் திருப்பித் தரப்படும் என மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்..
கடந்த பிப்ரவரி 3ம் தேதி எக்ஸ்பிரஸ் சாலையில் கோப்போலி பகுதியில் எரிவாயு டேங்கர் ஒன்று கவிழ்ந்ததால் டிராபிக் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 33 மணி நேரம் நீடித்த இந்தப் போக்குவரத்து நெரிசலால் ஒட்டுமொத்தச் சாலையும் ஸ்தம்பித்தது. இரு புறமும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நகர முடியாமல் நின்றன. இதில் பள்ளி வாகனங்கள் தொடங்கி பல்வேறு வாகனங்கள் மாட்டிக்கொண்டன. உணவு, நீர் மற்றும் பிற அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர்.
பாஸ்டேக்
எரிவாயு டேங்கர் விபத்தால் ஏற்பட்ட டிராபிக் நெரிசல் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. விபத்து ஏற்பட்ட உடனேயே சுங்கக் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்துமாறு நிர்வாகம் உத்தரவிட்டது. இருந்த போதிலும், இந்த உத்தரவு வருவதற்கு முன்பே, பல வாகன ஓட்டிகளின் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றிருந்தனர். அவர்களின் ஃபாஸ்டேக் கணக்குகளில் இருந்து கட்டணங்கள் ஏற்கனவே கழிக்கப்பட்டிருந்தன.
இது குறித்து மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் மூத்த அதிகாரி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சுங்கக் கட்டணம் வசூலை நிறுத்த உத்தரவிட்ட பிறகும் பல வாகனங்களில் இருந்து சுங்க தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த முழுத் தொகையும் திரும்பச் செலுத்தப்படும். ரூ.5.16 கோடி வாகன ஓட்டிகளுக்கே திரும்பத் தரப்படும். இந்தத் தொகை பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களின் ஃபாஸ்டேக் கணக்குகளுக்கு அடுத்த சில நாட்களில் நேரடியாக வரவு வைக்கப்படும்" என்றார்.
திரும்பத் தர உத்தரவு
மும்பை புனே எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் ஒல்ட் மும்பை புனே நெடுஞ்சாலை என்று இரண்டு சாலைகளிலும் இந்த விபத்தால் டிராபிக் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இரண்டு சாலைகளிலும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் சிக்கிய வாகனங்களுக்கு முழுக் கட்டணத்தைத் திரும்பக் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை நடத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு இது குறித்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் ஃபாஸ்டேக் பரிவர்த்தனை தகவல்களைச் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரீபண்ட் பெறுவது எப்படி
அந்த அதிகாரி மேலும் கூறுகையில், "சுங்கச்சாவடிகளில் உள்ள தடைகள் முழுமையாகத் திறக்கப்படும் முன்பு, சில பரிவர்த்தனைகள் தானாகவே ஆபரேட் ஆகியிருக்கும். பணம் தானாகக் கழிக்கப்பட்டு இருக்கும். அத்தகைய அனைத்துப் பரிவர்த்தனைகளும் ஆய்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்குத் தொகை திருப்பி அனுப்பப்படும்" என்று அந்த அதிகாரி கூறினார்.
இந்த ரீபண்ட்டிற்கு வாகன ஓட்டிகள் எதுவும் அப்ளை செய்யத் தேவையில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்தச் சாலையைக் கடந்து சென்றோருக்குத் தானாகச் சுங்க தொகை ரீபண்ட் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications