இந்திய கடற்படையின் முக்கிய ரகசியம் கசிவு.. ஒரு கமாண்டர்.. ஓய்வு பெற்ற அதிகாரிகள் அதிரடியாக கைது
மும்பை : கடற்கடை கமாண்டர், இரண்டு ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் நாட்டின் முக்கிய ரகசியங்களை கசியவிட்டதாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இதன் பின்னணியில் உள்ளனவா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
இந்திய கடற்படை உலகின் சக்தி வாய்ந்த கடற்படைகளில் ஒன்று. இந்தியா மூன்று பக்கம் நீரால் சூழப்பட்டிருப்பதால், எல்லையை பாதுகாப்பதில் கடற்படையின் பங்கு மிகப்பெரியது.
இதற்காக இந்தியா அதி நவீன ரக கப்பல்கள் மற்றும் கடற்படை விமானங்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்களை வாங்கி குவித்து உள்ளது. பல கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கி உள்ளது. அமெரிக்காவிடம் சில கப்பல்களை வாங்கி உள்ளது.

ரஷ்யா கப்பல்
ரஷ்ய கடற்படைக்காக ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட Kilo class நீர்மூழ்கிக் கப்பல்கள், உலகின் மிகவும் பொதுவான வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும், மேலும் அவை தற்போது பல நாடுகளின் கடற்படைகளில் சேவையில் உள்ளன.

நவீன மயம்
இந்தியாவில், இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் சிந்துகோஷ் வகுப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இன்றுவரை, அரசாங்கம் அத்தகைய 10 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கியிருக்கிறது. இவை அனைத்தும் மிக அற்புதமான நவீனமயமாக்கலுக்கு உட்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன. கடற்படையிடம் தற்போது 15 வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.

3 பேர் கைது
இந்நிலையில் கடற்படையின் கிலோ க்ளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்களை மேம்படுத்துவது குறித்த ரகசிய தகவல்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பணியில் இருக்கும் கடற்படை அதிகாரி மற்றும் ஓய்வு பெற்ற இரண்டு அதிகாரிகள் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சிபிஐ) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெளிவான தகவல் இல்லை
இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இந்த தகவல் கசிவின் பின்னணியில் ஈடுபட்டுள்ளதா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

யார் அவர்
இந்த விவகாரம் குறித்து கடற்படையின் வைஸ் அட்மிரல் மற்றும் ரியர் அட்மிரல் ஆகியோரால் விசாரிக்கப்பட்டு வருவதாக கடற்படை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ரகசிய தகவல்களைப் பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மும்பையைச் சேர்ந்த பணிபுரியும் அதிகாரி கமாண்டர் அந்தஸ்தில் ஆன பதவியில் உள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications