மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மராட்டியத்தில் 2 நாட்களில்.. 30,000 பேருக்கு கொரோனா... கட்டுப்படுத்த முடியாமல் திணறும் தாக்கரே அரசு

Google Oneindia Tamil News

மும்பை: மாரட்டியத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்துவந்த கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பரவல் மோசமாக உள்ளது.

Over 15,000 Covid Cases In Maharashtra For Two Days In A Row

குறிப்பாக, மகாராஷ்டிராவில் நிலைமை மிக மோசமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு அங்கு வைரஸ் பரவல் மிகவும் மோசமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

வெள்ளிக்கிழமை 15, 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 15,602 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நேற்று மட்டும் 88 பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர்.

மராட்டியத்தில் இப்போது 1,18,525 பேர் கொரோனா பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,461 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் குறிப்பாக, நாக்பூர் நகரில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது. அங்கு அதிகபட்சமாக 1,828 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, மும்பையில் 1,709 பேருக்கும் புனேவில் 1,667 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் தீவிரமடையும் கொரோனா..பிரேசில், அமெரிக்காவில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. பீதியில் உலக நாடுகள்மீண்டும் தீவிரமடையும் கொரோனா..பிரேசில், அமெரிக்காவில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. பீதியில் உலக நாடுகள்

இதுவரை மராட்டியத்தில் 22,97,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்துவது குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தி வருகிறார்.

English summary
In the past 48 hours, more than 30,000 corona cases reported in Maharashtra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X