"அரசியல்வாதிகள் எல்லாம் ஆபாச படம் பாக்குறாங்க.." ஆபாச பட வழக்கில் கைதான ராஜ் குந்த்ரா சர்ச்சை ட்வீட்
மும்பை: ஆபாசப் படங்களைத் தயாரித்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல்வாதிகள் ஆபாசப் படங்களைப் பார்ப்பது குறித்து அவர் பதிவிட்டுள்ள பழைய ட்வீட் வைரலாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் ஆபாசப் படங்களைத் தயாரித்த வழக்கில் மும்பை போலீசார் தங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் ஆண் மற்றும் பெண் மாடல்கள், ஒன்பது தயாரிப்பாளர்களை மும்பை போலீஸ் கைது செய்திருந்தது.

ஷில்பா ஷெட்டி கணவர்
இந்தச் சூழ்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதனைச் சந்தா மூலம் இயங்கும் மொபைல் செயலிகளில் வெளியிட்டு வந்ததாக போலீசார் குற்றஞ்சாட்டினர். இந்த வழக்கில் ராஜ் குந்த்ரா தான் முக்கிய குற்றவாளி எனத் தெரிவித்துள்ள மும்பை போலீசார், அவரை குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Array
இந்நிலையில், சுமார் 9 ஆண்டுகளுக்கு முன், அதாவது 2012ஆம் ஆண்டு ஆபாசப் படங்கள் குறித்தும், பாலியல் தொழில் குறித்தும் அவர் பதிவிட்ட ட்வீட்கள் தற்போது வைரலாகியுள்ளது. ராஜ் குந்த்ரா தனது பழைய ட்வீட்டில், "இந்தியாவில் நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். அரசியல்வாதிகள் ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர். ஆபாச நட்சத்திரங்கள் நடிகர்களாகி வருகிறார்கள்" என ட்வீட் செய்துள்ளார்.

ஆபாசப் படங்கள் vs பாலியல் தொழில்
அவர் தனது மற்றொரு ட்வீட்டில், "ஆபாசப் படங்கள் vs பாலியல் தொழில்..! கேமரா முன் ஆபாசப் படங்களில் நடிக்க ஒருவருக்குப் பணம் கொடுத்தால் அது சட்டப்படி சரி. இதற்கும் பாலியல் தொழிலுக்கும் என்ன வித்தியாசம்" என ட்வீட் செய்துள்ளார். இந்த இரண்டு ட்வீட்களும் இப்போது ட்விட்டரில் வைரலாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் ராஜ் குந்த்ராவின் இந்த பழைய ட்வீட்டை பகிர்ந்து நக்கலடித்து வருகின்றனர்.

மும்பை போலீசார்
ஆபாசப் படங்களைத் தயாரித்து, செயலி மூலம் வெளியிட்ட வழக்கில் மும்பை போலீசார் இதுவரை இரண்டு எஃப்ஐஆர்களை பதிவு செய்துள்ளனர். அதில் கடந்த பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது எஃப்.ஐ.ஆரில் தான் ராஜ் குந்த்ரா முக்கிய குற்றவாளியாகப் பெயரிடப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிடும் நிலையில், வரும் நாட்கள இது குறித்து பல்வேறு பூகம்பங்கள் வெளிவர காத்திருக்கின்றன.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications