Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் நவாப் மாலிக் கூறியது பொய் என்பதை நிரூபியுங்கள்.. வான்கடேவின் தந்தைக்கு ஐகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மும்பை : மும்பை மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே குறித்து அமைச்சர் நவாப் மாலிக் கூறியது பொய் என்று வான் கடேப்பின் தந்தை நிரூபிக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே. நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் மருமகன் சமீர் கான் ஆகியோரை போதை பொருள் பயன்பாடு தொடர்பான புகாரில் கைதுசெய்தார்.

இந்நிலையில் இந்தக் கைதுச் சம்பவங்களால் வான்கடே கடும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். தனது மருமகனை கைது செய்த சமீர் வான்கடேமீது, அமைச்சர் நவாப் மாலிக் அடுக்கடுக்கான புகார்களை கூறினார். சமீர் வான்கடேயின் மைத்துனர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக பெரும் குற்றச்சாட்டை நலப் மாலிக் கிளப்பினார். நவாப் மாலிக் தெரிவித்திருக்கிறார்.

மிரட்டல்

மிரட்டல்

மேலும் சமீர் வான்கடே பிறப்பால் முஸ்லிம் என்றும் , தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற்றதாகவும் அமைச்சர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் மும்பைத் திரைப் பிரபலங்களை போதைப்பொருள் வழக்கில் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக குற்றம் சாட்டினார் .

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

தொடர் புகார்கள் காரணமாக ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் வழக்கு விசாரணையிலிருந்து சமீர் வான்கடே விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, அமைச்சர் நவாப் மாலிக்மீது, வான்கடேயின் தந்தை தயாதேவ் வான்கடே போலீஸில் புகார் கொடுத்தார் .

இழிவான தகவல்

இழிவான தகவல்

அதில், அமைச்சர் நவாப் மாலிக் எங்களது சாதி குறித்து என்மீதும், என் குடும்பத்தினர் மீதும் தவறான தகவல்களைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்துவருகிறார். பல சந்தர்ப்பங்களில் பத்திரிகைகள், டி.வி-க்களில் என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் தவறான மற்றும் இழிவான தகவல்களை நவாப் மாலிக் வெளியிடுகிறார். என்னிடம் அதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் அதை விசாரணைக்காக வழங்குவேன். எனவே நவாப் மாலிக் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சட்டப் பிரிவு 503, 508, 499 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்று உதவி போலீஸ் கமிஷனரிடம் தயாதேவ் புகார் கொடுத்துள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கு

நீதிமன்றத்தில் வழக்கு

இது தவிர தன் மகன் சமீர் வான்கடே குறித்து அவதூறாகப் பேசியதற்காக நவாப் மாலிக் மீது தயாதேவ் அவதூறு வழக்கு ஒன்றையும் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அதில் ரூ. 1.25 கோடி மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

மோசமான கருத்து

மோசமான கருத்து

இந்த வழக்கில் வான்கடே தரப்பில் ஆஜரான அர்ஷத் ஷேக், நவாப் மாலிக் ட்வீட் பதில் வான்கடேவின் சகோதரியின் புகைப்படத்தை மேற்கோள் காட்டி அவரை "லேடி டான்" என்று அழைத்தார் என்று குற்றம் சாட்டினார். மேலும் பிறப்பு சான்றிதழ் குறித்து மோசமான கருத்து பதிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் வான்கடே குறித்த பிறப்புச் சான்றிதழ் உண்மை தானா என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி நவாப் மாலிக்குக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சருக்கு உத்தரவு

அமைச்சருக்கு உத்தரவு

தேசிய அரசியல் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் அமைச்சராக உள்ள நீங்கள் ட்வீட் செய்த அனைத்தையும் சரிபார்த்தீர்களா என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், "தகவல் சரிபார்க்கப்பட்டது என்று உங்களிடம் ஒரு பிரமாணப் பத்திரம் வேண்டும். அது ஒரு பக்க பிரமாணப் பத்திரமாக இருக்கலாம்" என்று கூறியதுடன் இந்த வழக்கை நவம்பர் 12ஆம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைத்தது.

நிரூபியுங்கள்

நிரூபியுங்கள்

முன்னதாக இந்த வழக்கில் போதை பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே, ஒரு பொது அதிகாரி என்றும், அவரை விசாரிக்க எந்த பொதுமக்களுக்கும் உரிமை உண்டு என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. அமைச்சர் கூறுவது பொய் என்பதை நிரூபிப்பது தினியான்தேவ் வான்கடேவையே சார்ந்துள்ளது என்று நீதிபதி மாதவ் ஜம்தார் அடங்கிய தனி நீதிபதி அமர்வு கூறியது. நீதிபதிகள் கூறும்போது "அவர்(மாலிக்) சொல்வது பொய் என்று நீங்கள் முதன்மையாக நிரூபிக்க வேண்டும். உங்கள் மகன் தனிப்பட்டவர் அல்ல. அவர் ஒரு பொது அதிகாரி, எந்த பொது மக்களும் அவரைப் பரிசோதிக்கலாம்... அவரது ஒவ்வொரு ட்வீட்டும் பொய் என்பதை நிரூபியுங்கள் ," என்று நீதிபதி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+