மதத்தை சொல்லி ஹிஜாப்பை தடுக்கிறீர்கள், ஓகே.. முதல்வர் யோகி காவி அணிவது சரியா? காங். எம்.பி. கேள்வி
மும்பை: ‛‛ஹிஜாப் பிரச்சனை உள்ள நிலையில் முழுநேரம் காவி உடை அணியும் முதல்வரை எப்படி பொறுத்து கொள்ள முடியும்'' என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி மஜித் மேமன் விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது. உடுப்பியில் துவங்கிய இந்த போராட்டம் மாநிலத்தின் பல பகுதிகளில் எதிரொலித்தது. ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் எதிர்தரப்பினர் காவிஷால் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது.

நீதிபதிகள்
கல்லூரிகளில் ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவிகள் தொடர்ந்த வழக்கு பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்கிறது.

ஹிஜாப் இடைக்கால தடை
இந்த வழக்கின் கடந்த வார விசாரணையின்போது, ‛‛வழக்கு விசாரணை முடியும்வரை பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது'' என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். சிலர் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து வீடுகளுக்கு செல்கின்றனர். துமகூரு தனியார் கல்லூரி விரிவுரையாளர் சாந்தினி என்பவரும் தனது பணியை ராஜினாமா செய்தனர்.

எப்படி பொறுக்க முடியும்
இந்நிலையில் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பியான மஜித் மேமன் டுவிட்டரில் உத்தர பிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்துள்ளார். அதாவது யோகி ஆதித்யநாத் உடை, ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றை ஒப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மஜித் மேமன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‛‛மதசார்பற்ற இந்தியாவில் மதத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டாம் என கேட்டுகொள்ளப்பட்டுள்ள நிலையில் ஒரு மாநிலத்தின் முதல்வர் மதத்தை அடையாளப்படுத்தும் காவி உடையை முழுநேரம் அணிந்திருப்பதை எப்படி ஒருவரால் பொறுத்து கொள்ள முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆதரவும், எதிர்ப்பும்
இந்த டுவிட்டர் பதிவில் அவர் யோகி ஆதித்யநாத்தின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை. மாறாக இந்தியாவில் காவி உடை அணியும் ஒரு முதல்வர் எனில் அது யோகி ஆதித்யநாத் மட்டுமே. இதன்மூலம் யோகி ஆதித்யநாத்தை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். மஜித் மேமனின் இந்த டுவிட்டர் பதிவுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications