மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்-என்சிபி கூட்டணிக்கு எதிர்ப்பு- சிவசேனா இளைஞரணி நிர்வாகி ராஜினாமா!

Google Oneindia Tamil News

மும்பை: காங்கிரஸ்- என்சிபி கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியிலிருந்து அதன் மூத்த தலைவர் ரமேஷ் சோலங்கி விலகினார்.

மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்து முதல்வராக வேண்டும் என்பது பால்தாக்கரேவின் கனவாகும். இதை நனவாக்க அவரது மகனும் சிவசேனாவின் தலைவருமான உத்தவ் தாக்கரே போராடி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தார் சிவசேனா. முதல்வர் பதவியில் சுழற்சி முறைக்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் என்சிபி பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் அக்கட்சி தனித்து விடப்பட்டது.

அமைதியாக காரியத்தை சாதித்த காங்கிரஸ்.. மகாராஷ்டிராவில் தேடி வந்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா?அமைதியாக காரியத்தை சாதித்த காங்கிரஸ்.. மகாராஷ்டிராவில் தேடி வந்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா?

இளைஞரணி நிர்வாகி

இளைஞரணி நிர்வாகி

இதையடுத்து காங்கிரஸ்- என்சிபி கூட்டணியுடன் இணைந்தது சிவசேனா. முதல்வராக நாளை உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். இந்த நிலையில் என்சிபி- காங்கிரஸ் கூட்டணியை அக்கட்சியின் மூத்த தலைவரும் இளைஞரணி நிர்வாகியுமான ரமேஷ் சோலங்கி விரும்பவில்லை.

பொறுப்பு

பொறுப்பு

இந்த நிலையில் 21 ஆண்டுகளுக்கு சிவசேனாவில் இருந்த ரமேஷ் சோலங்கி அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இது என்னுடைய ராஜினாமா கடிதம். நான் சிவசேனா கட்சியின் இளைஞரணி நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.

கடினமான முடிவு

கடினமான முடிவு

மகாராஷ்டிரா மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பை கொடுத்த உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்ய தாக்கரேவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிவசேனாவிலிருந்து விலகுவதால் என்னுடைய வாழ்வில் மிக கடினமான முடிவை எடுத்துள்ளேன்.

தலைவர்

சிவசேனா கட்சியினர் அனைவரும் எனது உடன்பிறந்தவர்கள். இந்த பந்தம்தான் என்னை 21 ஆண்டுகள் இக்கட்சியில் பயணிக்க வைத்தது. பால் தாக்கரேவின் நினைவுகள் எப்போதும் என் மனதில் இருக்கும் என தெரிவித்தார். உத்தவ் தாக்கரே பதவியேற்புக்கான விழா தடபுடலாக நடந்து வரும் நிலையில் அக்கட்சியிலிருந்து முதல் முறையாக விலகும் தலைவராகிவிட்டார் சோலங்கி.

English summary
Shivsena leader Ramesh Solanki quits from the party opposing to NCP - Congress alliance. He works for the Party for 21 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X