போதை பொருட்களுடன் ஆட்டம் போட்ட கும்பல்.. சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி.. ஷாருக்கான் மகன் கைது
மும்பை: மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை பொருள் பார்ட்டியில் ஷாரூக்கான் மகன் ஆர்யான் கான் கலந்து கொண்டதை அடுத்து விசாரணை வளையத்தில் இருந்த அவரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். இதனால் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கப்பலில் பிடிப்பட்ட எல்லோரும் மும்பையில் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட பின், பாலிவுட்டில் பலர் போதை பொருள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
பல முன்னணி நடிகர், நடிகைகள் போதை பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாகி உள்ளதாக புகார் எழுந்தது. இது பாலிவுட் உலகை உலுக்கியது.

விசாரணை
இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த வருடம் பல கட்ட சோதனைகளை மேற்கொண்டனர். அதன் ஒரு கட்டமாகவே நேற்று மும்பையில் எம்ப்ரெஸ் என்ற சொகுசு கப்பலில் சோதனை மேற்கொண்டனர். போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இந்த கப்பலில் ரேவ் பார்ட்டி நடக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது.

ரேவ் பார்ட்டி
ரேவ் பார்ட்டி என்பது போதை பொருளை பயன்படுத்தி இரவு முழுக்க நிர்வாணமாக நடனம் ஆடும் பார்ட்டி ஆகும். நடனம் ஆடும் பெண்களுக்கு பணம் கொடுப்பது இதில் சகஜம். பாலியல் ரீதியான உறவுகளும் இதில் நடக்கும். அதிக அளவில் போதை பொருள், பணம் புழங்கும் பார்ட்டி ஆகும் இது. இந்த நிலையில்தான் மும்பை சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி நடப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்துள்ளது.

மாறுவேடம்
இதையடுத்து அதிகாரிகள் மாறுவேடத்தில் டிக்கெட் வாங்கி அந்த கப்பலில் பயணம் செய்துள்ளனர். அந்த கப்பல் மும்பையில் இருந்து கோவா செல்லும் பார்ட்டி கப்பல் ஆகும். ஒரு ஆளுக்கு டிக்கெட் ரூ.10 லட்சத்திற்கும் அதிகம். 2 நாட்கள் முழுக்க முழுக்க அந்த கப்பலில் போதை பொருள் பார்ட்டி நடக்கும். இந்த நிலையில் அந்த கப்பல் மும்பை எல்லையை தாண்டிய சில நேரத்தில் பார்ட்டி தொடங்கி உள்ளது.

போதை பொருள் தடுப்பு பிரிவு
சரியாக உள்ளே இருந்த அதிகாரிகள், பார்ட்டியை நிறுத்திவிட்டு, அங்கு போதை பொருள் பயன்படுத்திவர்களை கையும் களவுமாக பிடித்தனர். மூட்டை மூட்டையாக போதை பொருட்களையும் கைப்பற்றினார்கள். இதை அனைத்தையும் தற்போது இவர்கள் மும்பை கொண்டு வந்துள்ளனர். ரகசிய தகவல் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கோவா
மும்பை போலீசார் மட்டுமின்றி கோவா போலீசாரும் இதில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த கப்பலில் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் இருந்துள்ளார். இவரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணையில் தனது பெயரை பயன்படுத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேறு யாரையோ அழைத்துள்ளதாக ஆர்யான் தெரிவித்தார். ஆனாலும் அவரது செல்போனில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து ஆர்யான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரியன்கான்
பாலிவுட் பிரபலங்கள் பலர் இந்த கப்பல் உள்ளே இருந்துள்ளனர். மொத்தம் 13 முக்கியமான பாலிவுட் பிரபலங்கள் இதில் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 7 மணி நேரம் நேற்று இரவோடு இரவாக இந்த ரெய்டு நடந்து இருக்கிறது. அந்த கப்பல் நிறுவனமும், பிரபல தனியார் தொலைக்காட்சி உள்ளிட்ட பல நிறுவனங்களும் இணைந்து இந்த பார்டியை நடத்தியதாக கூறப்படுகிறது. போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications