"நான் என்ன விஜய் மல்லையாவா? கொந்தளிக்கும் சஞ்சய் ராவத்!மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க சதி என பகீர் புகார்
மும்பை : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் நான் விஜய் மல்லையா? நான் மெஹுல் சோக்ஸியா? நான் நிரவ் மோடியா அல்லது அம்பானி அதானியா? என கேள்வி எழுப்பியுள்ள சஞ்சய் ராவத், மகராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு நிலமோசடி செய்ததாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தஞ்சை ராகத்திற்கு தொடர்பு இருப்பதாகவும் இதனால் இந்த வழக்கு தொடர்பாக அவரது சொத்துகளை அமலாக்கத் துறை இன்று முடக்கியது. முடக்கப்பட்டுள்ள சொத்துக்களில் ரவத்தின் அலிபாக் ப்ளாட் மற்றும் மும்பை தாதரில் உள்ள வீடு ஆகியவை அடங்கும்.

சஞ்சய் ராவத் எம்.பி
கடந்த சில மாதங்களில் சிபிஐ, அமலாக்கதுறை ஆகிய புலனாய்வு அமைப்புகளின் கண்காணித்து பலா சிவசேனா தலைவர்களில் சஞ்சய் ரவுத்தும் ஒருவர். மார்ச் மாதம் பணமோசடி வழக்கில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மைத்துனரின் 6.45 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கியது. மேலும் தலைமறைவாக உள்ள நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடையதாக பணமோசடி வழக்கில் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார்.

அமலாக்கத்துறை நடவடிக்கை
மேலும் மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பாஜக ஆட்சி இல்லாத அனைத்து மாநிலங்களும் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்கொள்வதாக மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா கூறியுள்ளது. இந்நிலையில் தனது சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ள நிலையில், நான் விஜய் மல்லையா? நான் மெஹுல் சோக்ஸியா? நான் நிரவ் மோடியா அல்லது அம்பானி அதானியா? என கேள்வி எழுப்பியுள்ள சஞ்சய் ராவத், மகராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக கூறியுள்ளார்.

பாஜக மிரட்டல்
இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராவத், " இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். இது அரசியல் பழிவாங்கும் விஷயமாக இருக்கிறது. மகாராஷ்டிரா அரசை வீழ்த்த வேண்டும் என்று என் மீது அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இல்லையெனில் மத்திய புலனாய்வு அமைப்புகளை சந்திக்க நேரிடும் என என் வீட்டிற்கு வந்து என்னை மிரட்டினர். நான் உடன்படாததால் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடங்கியது," என்றார்.

நான் விஜய் மல்லையா?
கடந்த ஜனவரியில், "சில மூத்த பாஜக தலைவர்கள்" தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் தன்னை பாஜக பக்கம் மாறுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அவர் மறுத்தால் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்ததாகவும் கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், :"சொத்து" என்ற வார்த்தையின் அர்த்தத்தை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்" "நான் விஜய் மல்லையா? மெஹுல் சோக்ஸியா? நிரவ் மோடியா அல்லது அம்பானியா அதானியா? நான் ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறேன். எனது சொந்த ஊரில் எனக்கு ஒரு ஏக்கர் நிலம் கூட இல்லை...

ஆட்சியை கலைக்க சதி
எது இருந்தாலும் அது எனது கடின உழைப்பால் சம்பாதித்த பணம். பணமோசடி நடப்பதாக புலனாய்வு அமைப்பு கருதுகிறதா? என்னை யாருடன் இணைக்கிறீர்கள்?" என பேசிய அவர், அவர்களால் என்னை பயமுறுத்த முடியாது. என் சொத்தை அவர்கள் கைப்பற்றினாலும் அல்லது என்னை சுட்டுக் கொன்றாலும் அல்லது சிறைக்கு அனுப்பினாலும், சஞ்சய் ராவத் ஆகிய நான் பாலாசாகேப் தாக்கரேவின் சீடர் மற்றும் சிவசேனா தொண்டன்" என ஆவேசமாக பதிலளித்தார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications