பார்ட்டி உணவில் போதை மருந்து கலப்பு.. மயங்கிய சோனாலி போகத்தை பலாத்காரம் செய்து கொலை.. சகோதரர் பகீர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாஜக தலைவரும் நடிகையுமான சோனாலி போகத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். மேலும் அவருக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என நடிகையின் சகோதரர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சோனாலி போகத். இவர் பாஜக தலைவர் ஆவார். இவர் டிக்டாக்கில் புகழ் பெற்றவர். இவருக்கு 42 வயதாகிறது. இவர் கடந்த திங்கள்கிழமை இரவு கோவாவில் உள்ள தனது நண்பர்களுடன் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்டார்.

இதையடுத்து அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வடக்கு கோவாவில் உள்ள அஞ்சுனாில் உள்ள செயிண்ட் அந்தோணி மருத்துவமனையில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை இறந்தார். இவருக்கு மாரடைப்பால் மரணம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

சோனாலி

சோனாலி

ஆனால் சோனாலி போகத் இறப்பதற்கு முன்னர் தனது தாய்க்கு போன் செய்தாராம். அப்போது அவரிடம் "எனக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது. பார்ட்டியில் சாப்பிட்டவுடன் உடல் நிலை சரியில்லை" என கூறினாராம். இந்த நிலையில் சோனாலியின் சகோதரர் ரிங்கு ஒரு புகார் கொடுத்துள்ளார்.

 தாயிடம் பேசிய சோனாலி

தாயிடம் பேசிய சோனாலி

அந்த புகாரில் சோனாலி இறப்பதற்கு முன்னர் தாயார், சகோதரி, மைத்துனருக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது அவர் சோகமாக இருந்துள்ளார். சோனாலி தனது கூட்டாளிகள் இருவருக்கு எதிராக புகார் கூறியிருந்தார் என்றும் சகோதரர் தெரிவித்தார். மேலும் சோனாலி மிரட்டப்பட்டு, அவரது உணவில் ஏதோ விஷம் கலந்திருப்பதாகவும் அதனால்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 ஹரியானா பண்ணை வீடு

ஹரியானா பண்ணை வீடு

சோனாலியின் ஹரியானா பண்ணை வீட்டில் இருந்த லேப்டாப், சிசிடிவி கேமரா உள்ளிட்ட பொருட்களை காணவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சோனாலியின் உதவியாளர் சுதிர், அவருக்கு போதை மருந்தை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் போட்டு வைரலாக்குவேன் என மிரட்டியதாக சோனாலி தன்னிடம் தெரிவித்திருந்ததாக சகோதரர் தெரிவித்தார்.

 அரசியல் சதி

அரசியல் சதி

சோனாலிக்கு எதிராக அரசியல் சதி செய்யப்பட்டுள்ளதாகவும் ரிங்கு கூறுகிறார். சோனாலியின் தொலைபேசிகள், சொத்து பதிவுகள், ஏடிஎம் கார்டுகள், வீட்டுச் சாவிகளை வைத்து அவரது அரசியல் மற்றும் திரைப்பட துறை கேரியரை அழித்துவிடுவதாக சுதிர் மிரட்டினாராம். படப்பிடிப்பிற்காகதான் கோவா செல்வதாக சோனாலி எங்களிடம் கூறியிருந்தார். ஆனால் அவரது உடலை வாங்க இங்கு வந்த போதுதான் சோனாலி கூறிய படி எந்த படப்பிடிப்பும் இல்லை என தெரியந்தது. எனவே சோனாலி இறப்பில் கதிருக்கு தொடர்பிருக்கலாம். சோனாலிக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டு இறந்திருக்கலாம் என ரிங்கு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+