உத்தவ் தாக்ரேதான் தலைவர் .. திடீர் குண்டு போட்ட ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ.. மகா அரசியலில் சலசலப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் தற்போது ஏக்நாத் ஷின்டே தலைமையிலான சிவசேனா அணி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், உத்தவ் தாக்ரேதான் எங்கள் குடும்பத் தலைவர் என எம்எல்ஏ ஒருவர் ட்வீட் செய்து அதனை உடனே டெலிட் செய்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநிலத்தில் உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசை வீழ்த்தி ஏக்நாத் ஷின்டே புதிய முதலமைச்சராக தேர்வாகினார்.

இந்நிலையில் அவரது ஆதரவு எம்எல்ஏ ஒருவர் உத்தவ் தாக்ரே குறித்து ட்வீட் செய்துள்ள சம்பவம் அம்மாநில அரசியல் களத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டியத்தில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு, தேர்தலுக்கு பின் கொள்கைகளில் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தை பிடித்தது. இதனால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக எதிர்க்கட்சி கட்டிலில் அமர்ந்தது. ஆனால் இன்னும் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், சிவசேனா கட்சியில் பிளவு காரணமாக மராட்டியத்தில் அந்த கூட்டணி ஆட்சி கடந்த மாதம் 29-ந் தேதி கவிழ்ந்தது.
சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் கூட்டணி அமைத்ததோடு முதலமைச்சர் பதவியையும் ஏற்றுக்கொண்டார். மராட்டிய சட்டசபையில் சிவசேனாவுக்கு மொத்தம் உள்ள 55 எம்எல்ஏக்களில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு 40 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா சட்டமன்ற குழு தலைவராக சபாநாயகர் அறிவித்தார். இதேபோல நாடாளுமன்ற மக்களவையில் சிவசேனாவுக்கு உள்ள 19 எம்.பி.க்களில் 12 பேர் ஷிண்டே அணிக்கு தாவினர். ஷிண்டே அணியை சேர்ந்த ராகுல் செவாலே எம்பியை சிவசேனா லோக் சபா குழு தலைவராக சபாநாயகர் ஓம்பிர்லா அங்கீகரித்தார்.
இதையடுத்து அடுத்த கட்ட நகர்வாக ஏக்னாத் ஷிண்டே தரப்பினர் 'நாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும், கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை எங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினர். இதேபோல் மறுபக்கத்தில் பால்தாக்கரேவின் மகனான உத்தவ் தாக்கரே, கட்சியையும் சின்னத்தையும் யாரும் உரிமை கோரினால் தங்களை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை அனுப்பியிருந்தார்.
இதையடுத்து இரு அணிகளும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என கூறி வரும் நிலையில், அதற்கான ஆவணங்களை சமர்பிக்குமாறு தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பு, உத்தவ் தாக்கரேவுக்கு உத்தரவிட்டது. அதற்கான அனைத்து ஆவணங்களையும் ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. பிரச்னை இவ்வாறாக சென்றுகொண்டிருக்க, இடையில் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ ஒருவர் "உத்தவ் தாக்ரேதான் எங்கள் குடும்பத் தலைவர்" டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். பின்னர் உடனடியாக அதை டெலிட் செய்துவிட்டார்.
இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுரங்கபாத் மேற்கு தொகுதியின் எம்எல்ஏவான சஞ்சய் ஷர்சாட்தான் இந்த அந்த சர்ச்சைக்குரிய நபர். இவர் மேற்குறிப்பிட்டவாறு ட்வீட் செய்திருந்து உத்தவ் தாக்ரே பேசிய வீடியோவையும் அதனுடன் இணைத்திருந்தார். கட்சி தாவும்போது அமைச்சர் பதவி கொடுப்பதாக கூறியதாகவும், ஆனால் தற்போது பதவி வழங்காததால் இவ்வாறு வீடியோவை பதிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்து ஷர்சாட் விளக்கமளிக்கையில், "தொழில்நுட்ப கோளாறு காரணமாக ட்வீட் பதிவிடப்பட்டுவிட்டதாக" கூறியுள்ளார். மேலும், "எனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஷிண்டே அணியில் இருப்போர் அனைவரும் எதையாவது எதிர்பார்த்துதான் இருக்கிறார்கள். ஆனால், தற்போது அமைச்சரவை விரிவாக்கப்பட உள்ளது. இதில் எனக்கு பதவி கிடைக்கும் என நினைக்கிறேன். நான் பதவிக்காக அலையவில்லை. அதுபோல திரும்பி உத்தவ் தாக்ரே அணிக்கு செல்லவும் விருப்பம் இல்லை. உத்தவ் தாக்ரே சிவசேனாவின் தலைவராக இருந்து, முதலமைச்சர் பதவியை வேறு யாரிடமாவது கொடுத்தால் சிறப்பாக இருக்கும்" என கூறியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications