''இதுக்குத்தான் தடுப்பூசி போடணும்னு சொன்னோம்'' மகாராஷ்டிரா அதிகாரிகள் சொல்லும் அலர்ட் தகவல்
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் தான் நோய் பாதித்தால், ஆபத்தான கட்டத்துக்கு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தினசரி பாதிப்பு, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 6 ஆயிரமாக இருந்த நிலையில், நேற்று பாதிப்பு இரண்டு லட்சத்தைக் கடந்திருக்கிறது.
மத்திய சுகாதாரத்துறை அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,47,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 1.94 லட்சமாக இருந்தது. இந்நிலையில், நேற்று ஒரேநாளில் 27 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
மேலும் இந்தியாவில் தினசரி பாதிப்பு விகிதம் 11.5 சதவீதத்தில் இருந்து 13.11 ஆக உயர்ந்தது. இதுமிகமிக அதிகம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மராட்டியம், மேற்கு வங்காளம், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகம், உத்தரபிரதேசம், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் கவலைக்குரிய மாநிலங்களாக உருவாகி வருகின்றன.

மும்பையில் அதிகரிப்பு
மகாராஷ்டிராவில் கடந்த 2 நாட்களாக பாதிப்பு குறைந்து இருந்தது. ஆனால் நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு கவலையில் இருக்கிறது. புதிதாக 46 ஆயிரத்து 723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஒமைக்ரான்
மாநிலத்தில் கொரோனா தொற்றுடன்சேர்ந்து ஒமைக்ரான் தொற்றும் அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மட்டும் 86 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதில் 53 பேர் புனே நகரைச் சேர்ந்தவர்கள். இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,367 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 734 பேர் குணமடைந்துவிட்டனர். மாநிலம் முழுவதும் ஒமைக்ரான் தொற்றும் அதிகரித்துவருகிறது.

தடுப்பூசி
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா நோய் வேகமாக பரவி வந்தாலு, பாதிப்புகள் குறைந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை அதிகாரி இக்பால் கூறுகையில், ''தடுப்பூசி கொரோனாவுக்கு அரணாக இருக்கிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இந்த தகவல் ஆறுதல் அளிக்கிறது.
Recommended Video

ஐ.சி.யூ
கொரோனாவால் மாநிலம் முழுவதும் 186 நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கையில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இவர்களில் 96 சதவிகிதத்தினர் தடுப்பூசி எடுக்காதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை'' என்று தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்னும் 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications