கர்நாடகாவையே உலுக்கிய மைசூர் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்: தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் அதிரடி கைது
மைசூர்: மைசூரில் எம்பிஏ படிக்கும் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழகத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
Recommended Video
கா்நாடக மாநிலம், மைசூரைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவா், கடந்த செவ்வாய்க்கிழமை தனது கல்லூரி தோழருடன் ஹாலனஹள்ளி காவல் சரகத்திற்குள்பட்ட சாமூண்டீஸ்வரி மலை அருகே லலிதாபுரா மலைக்குன்றுக்கு ட்ரிப் சென்றார்.
அது ஆள் நடமாட்டமில்லாத காட்டு பகுதியாகும். அங்கே வழிமறித்த, 6 போ் கொண்ட கும்பலைச் சோ்ந்தவா்கள், அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

கூலித் தொழில் செய்பவர்கள்
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும் கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், குற்றவாளிகளின் செல்போன் நெட்வொர்க்கை வைத்து, அவர்களை கைது செய்துள்ளது காவல்துறை. கைது செய்யப்பட்ட அனைவரும் எலக்ட்ரீசியன், டிரைவர் போன்ற கூலித்தொழில் செய்து வருபவர்கள் ஆகும். இவர்கள் அனைவருமே தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறு வயது குற்றவாளிகள்
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு வயது 17. மற்றவர்கள் வயது 20ஐ ஒட்டியுள்ளது. பலாத்காரம் செய்ததோடு, அந்த மாணவர்களிடம் மூன்று லட்ச ரூபாய் கேட்டு இவர்கள் மிரட்டியுள்ளனர். இது திட்டமிட்டு நடைபெற்றதா அல்லது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடந்ததா என்பது பிரச்சினை கிடையாது. மொத்தத்தில் பலாத்காரம் என்பது பலாத்காரம் தான் என்று போலீஸ் டிஜிபி தெரிவித்தார்.

வழிப்பறி
கைது செய்யப்பட்ட அனைவரும் ஏற்கனவே வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் ஆகும். இவர்கள் அவ்வப்போது, மைசூர் வந்து வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு, தமிழ்நாட்டுக்கு தப்பி செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இளம் ஜோடிகள், தனியாக பயணம் செய்பவர்கள் தான் இவர்களது இலக்காக இருந்துள்ளது.

பலாத்காரம், மிரட்டல்
சம்பவம் நடந்தபோது இவர்கள் முழு மது போதையில் இருந்துள்ளனர். இதையடுத்து அந்த இருவரையும் இழுத்துச் சென்று அதில் மாணவியை பலாத்காரம் செய்துள்ளது இந்த கும்பல். அவர்களை உயிரோடு விட வேண்டும் என்றால் 3 லட்ச ரூபாய் தரவேண்டும் என்று சுமார் இரண்டு மணி நேரமாக கத்திமுனையில் வைத்து மிரட்டி உள்ளனர். பலாத்காரம் செய்த பிறகு இவ்வாறு மிரட்டல்களையும் சந்தித்ததால் மன அளவில் அந்த மாணவி கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு தற்போது தான் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் தனது சொந்த ஊரான மும்பைக்கு அவர் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications